முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க பாட்டி சொன்னது

Advertisement

முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய 

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே தங்களுடைய முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றார்கள். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பல்வேறு பிரச்சனைகல் ஏற்படுகிறது. அதில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பருவானது ஆரம்பத்தில் சிறிய கொப்பளமாக தான் வருகிறது. ஆனால் நாம் அதனை கையை வைத்து நோண்டி கொண்டே இருப்பதால் நிறைய வருகின்றது.

மேலும் இந்த பருக்கள் நாளடைவில் கருப்புள்ளிகளாக மாறுகின்றது. அதன் பிறகு சிறிய சிறிய பள்ளங்களாக மாறுகின்றது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இதனை இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 முகத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய ஐஸ் பேக்:

முகத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய ஐஸ் பேக்

ஐஸ் பேக் ஆனது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது. அதனால் இதனை முகத்தில் உள்ள பள்ளங்களுக்கு  பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

நீங்கள் ஐஸ் கட்டியை எடுத்து கொள்ள வேண்டும், இதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஐஸ் கட்டியை சேர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் முழுவதுமாக ஐஸ் தண்ணீராக வைத்து கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரில் முகத்தை காட்ட வேண்டும். காட்ட வேண்டும் என்றவுடனே  மேலேயே காட்டாதீர்கள். அந்த தண்ணீரானது உங்கள் முகத்தில் நினைய வேண்டும். அதிலேயே 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இது போல் நீங்கள் தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைவதை காண்பீர்கள்.

முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..

பள்ளங்கள் மறைய தக்காளி:

பள்ளங்கள் மறைய தக்காளி

தக்காளியை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். இதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடத்திற்கு இப்படி நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள மறைவதை நீங்களே பார்ப்பீர்கள்.

எந்த ஒரு குறிப்பையும் ஒரு நாள் அல்லது 5 நாட்கள் பயன்படுத்திவிட்டு ரிசல்ட் இல்லை என்று புலம்ப கூடாது. ஏனென்றால் எதையுமே தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் அதிலிருந்து நாம் ரிசல்ட்டை பெற முடியும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement