தலைமுடி கொட்டிக் கொண்டே இருக்கிறதா..? அப்போ முடக்கத்தான் கீரையை இப்படி பயன்படுத்துங்கள்..!

Patti Vaithiyam Hair Oil in Tamil

Patti Vaithiyam Hair Oil in Tamil

முடி கொட்டுவதற்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அதாவது உடல் சூடு, சாது குறைபாடு, அழுக்கு, பேன், பொடுகு இதுபோன்ற பல பிரச்சனைகளால் முடி கொட்டுகிறது. எனவே இதனை தடுக்க பல வழிகள் இருந்தாலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகள் நமக்கு நன்கு பயனளிக்கும். இக்காலத்தில் கூட பல்வேறு பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம் தான் எனவே தலைமுடி கொட்டாமல் இருக்க அக்காலத்தில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Paati Vaithiyam For Hair Fall in Tamil:

 how to stop hair fall in tamil

தேவையான பொருட்கள்:

  • முடக்கத்தான் கீரை – 1 கைப்பிடி 
  • கருவேப்பிலை – 1 கைப்பிடி 
  • விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்

How To Stop Hair Fall in Tamil:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 அல்லது 6 ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் அதில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். இவை நன்கு வதங்கி எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெய்யை சிறிது நிறம் உலர விடுங்கள். எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி ஒரு எடுத்து கொள்ளுங்கள்.

முடி கொட்டுன இரண்டே வாரத்தில் இடுப்பிற்கு கீழ் தலைமுடி வளர கற்றாழை ஒன்று போதும்.  எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.

அப்ளை செய்யும் முறை:

முதலில் தலையை நன்கு சிக்கு இல்லாமல் சீவி வைத்து கொள்ளுங்கள். பிறகு முடியை சிறிது சிறிதாக பிரித்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெய்யை நன்கு முடியின் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணி நேரம் வைத்து பிறகு தலையை சீயக்காய் பயன்படுத்தி தேய்த்து நன்கு அலசி விடுங்கள்.

 

பிறகு, தலைமுடியை ஈரப்பதம் இல்லாதவாறு வெயிலில் நன்கு காயவைத்து கொள்ளுங்கள். ஏனெற்றால் இதில் நாம் சேர்த்து இருக்கும் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இரண்டும் குளிர்ச்சி தன்மை உடையது. இதனால் ஒரு சிலருக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, தலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இம்முறையை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் முடி கொடுத்தால் விரைவில் நீங்கிவிடும்.

போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்