சரும பிரச்சனை அனைத்திற்கும் பப்பாளி பேஸ் பேக்..! Papaya Face Pack Benefits in Tamil
சரும அழகை பெற இன்றைய கால கட்டத்தில் பெண்கள் ள் என்னென்னவோ முயற்சி செய்திருப்பார்கள். இதற்கு, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்கள் முதல், பல வகையான சிகிச்சைகள் வரை என பலவற்றை முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் செய்த பிறகும் கூட முகத்தில் எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுவது கிடையாது. இருப்பினும் சரும அழகை பெற நமக்கு எளிதாக கிடைக்கும் பப்பாளி பழத்தை முகத்திற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக மற்றும் பொலிவுடன் காணப்படும். சரி வாங்க இங்கு சிலவகையான பப்பாளி பழத்தின் பேஸ் பேக்கை பார்க்கலாம்.
வறண்ட சருமத்திற்கு பப்பாளி மற்றும் தேன் – Papaya Face Pack in Tamil:
தேன் சரும வறட்சியை நீங்கி சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளும். இத்தகையன் தேனை நாம் பப்பாளியுடன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகம் பொலிவுடன் இருக்கும். சருமம் புத்துணர்ச்சியடையும்.
தேவைப்படும் பொருட்கள்:
- பழுத்த பப்பாளி 1/2 கப்
- முழு பால் 2 தேக்கரண்டி
- தேன் 1 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
- பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
- மசித்த பப்பாளியுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
- இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும்.
- பிறகு 1/2 மணி நேரம் கழித்து சருமத்தை கழுவவும்.
- இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வரலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு போடி போதும்..!
முகப்பருவுக்கு பப்பாளி, தேன் மற்றும் எலுமிச்சை:
தேன் மற்றும் பப்பாளி சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி ஆகியவை சருமத்தை சுத்தப்படுத்தி, துளைகளை அடைக்க உதவுகிறது. இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஒரு ஸ்பேஸ் மாஸ்க் தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
- பப்பாளி 1/2 கப்
- தேன் 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
- 1 தேக்கரண்டி சந்தன தூள்
பயன்படுத்தும் முறை:
- பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
- பிறகு மற்ற பொருட்களையெல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவவும்.
- சுமார் 10-15 நிமிடங்கள் உலர விடவும் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
- இந்த முறையை 3-4 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும்.
பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் பேஸ் பேக்:
வெள்ளரிக்காய் சருமத்தை ஹைட்ரேட் செய்து மென்மையாக்க உதவுகிறது. சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் முகப்பருவை நீங்கி சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளும்.
தேவைப்படும் பொருட்கள்:
- பழுத்த பப்பாளி துண்டுகள் 1/4 கப்
- 1/2 வெள்ளரி
- 1/4 கப் பழுத்த வாழைப்பழ துண்டுகள்
பயன்படுத்தும் முறை:
- வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, பப்பாளி மற்றும் வாழைப்பழத்துடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அதை 15 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்.
- முதலில் வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும், பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- தினமும் இந்த முறையை செய்து வரலாம்.
முகத்தில் உள்ள துளைகள் நீங்க பப்பாளி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு பேஸ் பேக்:
முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள துளைகள் அனைத்தும் நீங்கி முகம் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த வெள்ளை கருவுடன் பப்பாளி பழத்தை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் சருமம் முகத்தில் உள்ள துளைகள் அனைத்தும் நீங்குவிடும். சரி அந்த பேஸ் பேக் எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பப்பாளி துண்டுகள் 1/2 கப்
- 1 முட்டையின் வெள்ளைக்கரு
பயன்படுத்து முறை:
- பப்பாளி துண்டுகளை மசித்துக்கொள்ளுங்கள், பின் முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- இந்த இரண்டையும் கலந்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
- பின் 15 நிமிடங்கள் களைத்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு நாளில் எவ்வளவு முடி கொட்டினாலும் இதனை மட்டும் அப்ளை பண்ணுங்க முடியே கொட்டாது..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |