பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க
பொதுவாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அவர்கள் உடல் உறுப்புகளை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள. அதிலும் நமது பற்களை மஞ்சள் கறை வராமல் பார்த்து கொள்வது அவசியமாக நினைப்பார்கள். பற்களில் மஞ்சள் கறை வருவதற்கு காரணமாக இருப்பது அதிக அளவு டீ, காபி குடிப்பது மற்றும் சிகரெட் பிடிப்பது ஆகும். அதனால் இயற்கையான முறையில் பற்களில் உள்ள மஞ்சள் கரையை போக்குவதற்கு இன்றைய பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு :1
முதலில் ஒரு கப்பை எடுத்து கொள்ளவும். அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் வேப்பங்குச்சியில் அந்த சாற்றை நனைக்கவும். அதனை பற்களில் உள்ள மஞ்சள் கறையின் மேல் வைத்து தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதனை வாரத்தில் 1 முறை செய்வதன் மூலம் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்கி விடலாம்.
பற்களில் கறைகள் மற்றும் மஞ்சள் நிறமாக உள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
குறிப்பு : 2
முதலில் ஒரு டூத் பேஸ்ட்டை எடுத்து கொள்ளவும். பிறகு 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், இதனை டூத் பேஸ்ட்டின் மேல் தடவி, அதனை பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கி விடும். இதனை வாரத்தில் 2 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு : 3
முதலில் ஆரஞ்சு பழ தோலை எடுத்து கொள்ளவும். இதனை படுக்கைக்கு சொல்லும் முன்பு, ஆரஞ்ச் பழ தோலினை பற்களில் வைத்து தேய்க்க வேண்டும். பின்பு மறுநாள் நல்ல சுத்தமான தண்ணீரில் பற்களை கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதனால் பல்லில் உள்ள மஞ்சள் கறையை நீக்கி விடலாம். இதனை வாரத்தில் 1 அல்லது 2 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு : 4
முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும். பிறகு சிறிதளவு இஞ்சி சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை ஒரு டூத் பேஸ்ட்டில் நனைத்து பற்களில் தேய்த்து வருவதால் பற்களில் உள்ள மஞ்சளை நீக்கி விடலாம். இதனை வாரத்திற்கு 1 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு : 5 
முதலில் பவுலை எடுத்து கொள்ளவும். பின்பு 5 கிராம்பு பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து கலக்கவும். பின்பு அந்த எண்ணெயை 1 மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். அதனை டூத் பேஸ்ட்டில் தடவி, 1 நிமிடம் தேய்த்து விட்டு தண்ணீரை கொண்டு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இதனை மாதத்தில் 1 முறை செய்வதனால் மஞ்சள் கறையை நீக்கி விடும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |