பாட்டி வைத்தியம்
நமது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை முறைகள் உள்ளது.
இயற்கை எப்போதும் நமது சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும். அதுவும் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் போது செலவுகளும் குறையும். இன்றைய பதிவில் எளிமையான முறையில் முகத்தில் மருக்களை நீக்கி பளிச் என்ற சருமத்தை பெற சில இயற்கை வழிமுறைகள் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பளிச் மாற பாட்டி சொன்ன வைத்தியம்:
சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை எந்த ஒரு பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆரோக்கியமானது. சருமம்
எப்போதும் புத்துணர்ச்சி உடன் இருக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். தண்ணீர் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிவிடும். நச்சுக்கள் வெளியேறிவிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
Tips 1:
ஒரு சிறிய கிண்ணத்தில் தேன் எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் சிறு தூளி எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
15 நிமிடம் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். இதனை தொடர்ந்து இரு தினங்கள் செய்து வந்தால் முகம் பளிச் என்று மாறிவிடும்.
Tips 2:
பசும் பால் மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால் அவற்றில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்து இருப்பதால் முகம் பளிச் என்று மாறும்.
என்றென்றும் இளமையாக புது பொலிவுடனும் இருக்க தேங்காய் எண்ணெய் மட்டும் போதும் ..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |