Patti Vaithiyam For Hair Growth in Tamil
தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க என்ன செய்வது என்று யோசிக்கும் பெண்களுக்கு இன்றைய பதிவு ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்யலாம் என்பதற்கு ஒரு அருமையான பாட்டி குறிப்பு ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெமிடியை வீட்டிலேயே செய்வதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த ரெமிடியை எவ்வாறு தயார் செய்வது என்று பதிவின் வாயிலாக விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்:
முடி வேகமாக வளர வைப்பதற்கு நம்முடைய வீடுகளில் வளர்த்து வரும் கறிவேப்பிலை இலை மற்றும் மருதாணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அதனால் இந்த பொருளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.
- மருதாணி இலை- 1 கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- தேங்காய்- 1/4 லிட்டர்
- டீத்தூள்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 2 டம்ளர்
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
முடி வளர கறிவேப்பிலை:
முதலில் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலையினை நன்றாக அலசி விட்டு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு அதே மிக்சி ஜாரில் 1 கைப்பிடி அளவு மருதாணி இலையினையும் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து இரண்டு பேஸ்ட்டினையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பின்பு 2 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள பேஸ்ட்டினையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் டீத்தூள் பேஸ்ட்டில் இருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கடாயில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய், டீத்தூள் சாறு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
10 நிமிடம் கழித்த பிறகு கொதிக்க வைத்துள்ள எண்ணெயினை இறக்கி ஆற விடுங்கள். அவ்வளவு தான் முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணெய் தயார்.
இவ்வாறு தயார் செய்து வைத்துள்ள தினமும் என 6 மாதம் வரை தேய்த்து வருவதன் மூலம் தலையில் ஏதாவது நரை முடி இருந்தாலும் அது கருப்பாக மாறிவிடும். மேலும் கையில் அடங்காத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…
செலவு செய்திடாமல் முடியை கருப்பாக நீளமாக மாற்ற பாட்டி சொன்ன மாறி இந்த இரண்டையும் கலந்து தடவுங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |