கர்நாடகா ஹம்பி சட்னி – Peanut Onion Chutney Recipe in Tamil
எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிடுவது வழக்கம். நாம் எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான் செய்வார்கள். ஆனால் அதுவே செய்து சாப்பிட்டு போர் அடிக்கும். ஆகவே வீட்டில் எப்போதும் சட்னி செய்யாமல் இது மாதிரியான வித்தியாசமான சட்னியாக அரைத்து சாப்பிட்டால் தான் அது சுவையாக இருக்கும். இந்த பதிவின் வாயிலாக தான் இட்லி தோசைக்கு சாப்பிடுவது போல் கர்நாடகா ஹம்பி சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.
Peanut Onion Chutney Recipe in Tamil:
செய்முறை:
- முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் நாம் எடுத்துவைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- அது ஓரளவு வதங்கிய பிறகு அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் 1/2 ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து அடுப்பை மீடியத்தில் வைத்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- அதன் பின்பு அதில் புளி சேர்த்துக் கொள்ளவும். அதேபோல் புதினா சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
அரைக்கும் முறை:
- முதலில் மிக்சி ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் சிறிய துண்டாக நறுக்கிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அரைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அதனை நன்கு அரைத்து எடுத்து வரவும்.
- அடுத்து தாளிக்க கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு, அதில் கடுகு சேர்த்து பொரிந்து வரும் நிலையில் கருவேப்பிலை போட்டு சட்னியை அதில் ஊற்றி கொள்ளவும். அவ்வளவு தான் சூப்பராக இருக்கும். தோசை இட்லி சேர்த்து சாப்பிடுங்கள் அவ்வளவு சூப்பராக இருக்கும்.
எவ்வளவு சட்னி செய்தாலும் இந்த சட்னிக்கு தனி ருசி தான்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |