இனிமேல் கடைகளுக்கு சென்று கஷ்டப்படாமல் வீட்டிலேயே பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் செய்யலாம்…!

        Pedicure and Manicure Home Remedies in tamil 

இன்றைய கால பெண்கள் உச்சி முதல் பாதம் வரை அழகாக வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். திருமணம் மற்றும் விஷங்களுக்கு செல்லும் போது அழகாக இருக்க வேண்டும், என்று கடைகளில் விற்கப்படும் கிரீம் மற்றும் சோப்புகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பியூட்டி பார்லர் சென்று பல விதமான இரசாயன கலவைகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு இனிமேல் அவசியம் இல்லை. இன்றைய பதிவில் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர் இந்த இரண்டையும் செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள் :

 • தண்ணீர் – தேவையான அளவு
 • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • பேங்கிங் சோடா –1  டேபிள் ஸ்பூன்
 • ஷாம்பு – 2 டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – சிறிதளவு
 • காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
 • கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 • தயிர் – 2  டேபிள் ஸ்பூன்
 • நெயில் பாலிஷ் ரிமூவர் – 1 டேபிள் ஸ்பூன்

உங்க நகம் நீளமாகவும் அழகாகவும் வளர வேண்டுமா.? அப்போ இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க..!

மெனிக்யூர் செய்முறை :

ஸ்டெப் : 1

 manicure in tamil

முதலில் நெயில் பாலிஷ் ரிமூவர் எடுத்து கொள்ளவும். பிறகு நம் கை விரலில் உள்ள நெயில் பாலிஷ் மற்றும் அழுக்குகளை அகற்ற வேண்டும். நெயில் பாலிஷ் ரிமூவரை ஸ்பாஞ்சில் ஊற்றி, அந்த ஸ்பாஞ்சை வைத்து கை விரலில் உள்ள நெயில் பாலிஷை துடைக்க  வேண்டும். அதன் பின் தேங்காய் எண்ணெயை  விரல்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் : 2

 manicure at home with natural ingredients

ஒரு  ட்ரே எடுத்து கொள்ளவும். பிறகு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றவும். பின்பு அதனுடன்  உப்பு, பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு, எலுமிச்சை சாறு  சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் கைகளை அந்த தண்ணீரில் 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்பு கையை வெளியே எடுத்து விட்டு, எலுமிச்சை பழத்தை வைத்து விரல்களில் மசாஜ் செய்யவும். பிறகு ஷாம்புவை கையில் ஊற்றி முழுவதும் அப்ளை செய்த பின் கைகளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பின்பு ஒரு துணி கொண்டு கையை முழுவதும் துடைக்க வேண்டும்.

ஸ்டெப் :3

 manicure at home with natural ingredients

ஒரு பவுலில்  காபி தூள், கடலை மாவு, தயிர், இந்த மூன்று பொருள்களையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை கை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். இதை 10 நிமிடம் அப்படியே வைத்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கடைசியாக  Manicure cream அப்ளை செய்வதனால் கை விரல்கள் அழகாக மாறிவிடும்.

பெடிக்யூர் : 

தேவையான பொருட்கள் : 

 • சூடான தண்ணீர் – போதுமான அளவு
 • கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – சிறிதளவு
 • லாவெண்டர் எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
 • ஸ்க்ரப் – சிறிதளவு
 • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
 • வெள்ளை சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – சிறிதளவு

பெடிக்யூர் செய்முறை: 

ஸ்டெப் : 1 

 Pedicure and Manicure Home Remedies in tamil

முதலில் நெயில் பாலிஷ் ரிமூவர் எடுத்து கொள்ளவும். பிறகு நம் கால் உள்ள அழுக்குகள் மற்றும் நெயில் பாலிஷை முழுவதுமாக துடைக்க வேண்டும். நெயில் பாலிஷ் ரிமூவரில் ஒரு ஸ்பாஞ்ச் ஊற்றி, அதனை கால் விரல்களில் உள்ள நெயில் பாலிஷை துடைக்க வேண்டும். பிறகு துணியை கொண்டு கால்களை சுத்தமாக துடைக்க வேண்டும்.

வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி?

ஸ்டெப் : 2

 

 pedicure at home in tamil

ஒரு பாத்திரத்தை மிதமான சுடு தண்ணீரை எடுத்து கொள்ளவும். அதில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு,  எலுமிச்சை சாறு, 4 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய், போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு இரண்டு கால்களையும் அந்த பாத்திரத்தில் அப்படியே வைக்க வேண்டும். இதில் 15 நிமிடம் அப்படியே கால்களை ஊற வைக்கவும். அதன் பின் ஒரு துணியை கொண்டு நல்ல சுத்தமாக கால்களை துடைக்க வேண்டும்.

ஸ்டெப் : 3 

 pedicure at home in tamil

ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அதில் தேன், வெள்ளை சர்க்கரை பொடியாக்கி 1 டேபிள் ஸ்பூன் இந்த இரண்டு பொருளையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு செய்து வைத்த பேஸ்ட்டை கால் முழுவதும் மசாஜ் செய்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு சூடான தண்ணீரில் கால்களை கழுவ வேண்டும்.

பிறகு தேங்காய் எண்ணெயை கால்கள் மேல் தடவினால் கால் பளபளப்பாக இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil