ஈறு, பேன் உள்ள தலையில் இதை அப்ளை செய்தால் போதும்.. ஒரே நாளில் எல்லாம் செத்து போய்விடும்..!

Advertisement

Pen Poga Enna Seiya Vendum | பேன் ஈறு போவதற்கு மருந்து

பெரும்பாலானோர்க்கு தலையில் அதிகமாக ஈறு பேன் இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு தலையை வாரகூட முடியாத அளவிற்கு ஈறு முடியின் எல்லாப்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதனால் சிலர் வெளியில் செல்ல கூட மாட்டார்கள். சரி தலையில் உள்ள ஈரையும் பேனையும் போக்க என்னதான் வழி என்று தானே கேட்கிறீர்கள்.. தலையில் உள்ள பேனை மொத்தமாக ஒழித்து கட்ட ஒரு சூப்பரான வழி ஒன்று இருக்கிறது அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

பேன் ஈறு தொல்லையினால் பலரும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். தலையில் பேன் இருந்தால் தலைமுடி அதிகமாக கொட்டும். அதுமட்டுமில்லாமல், தலையில் புண்கள் ஏற்படும். ஆகையால், தலையில், பெண் ஈறு இல்லாமல் பார்த்து கொளுங்கள். அப்படி ஈறு பேன் தலையில் வந்துவிட்டால் அதனை எப்படி ஒழிக்க வேண்டும் எஎன்பதை தெரிந்துகொண்டு ஒளித்து விடுங்கள்.

பேன் ஈறு தொல்லை நீங்க மருந்து:

பேன் ஈறு தொல்லை நீங்க மருந்து

  • முதலில் 50 மிலி அளவிற்கு வேப்ப எண்ணெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • இதனை தலையின் எல்லா பகுதிகளிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் தலையில் எந்த பகுதியில் அதிக பேனும் ஈறும் இருக்கிறதோ அந்த இடத்தில் அதிகமாக அப்ளை செய்து 1 மணிநேரம் வரை ஊறவிடுங்கள்.
  • அதாவது, தலையில் எண்ணெய் நன்றாக வழியும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் தலையில் உள்ள பேன் ஈறு அனைத்தும் உடனே இறந்து விடும்.

பேன் போவதற்கு நாட்டு மருந்து

  • 1 மணிநேரம் கழித்து தலையை ஷாம்பு போட்டு நன்றாக அலசி விடுங்கள். அதன் பிறகு ஒரு வெள்ளை நிற டவலை எடுத்து உங்கள் தலையில் நன்றாக தேய்த்து துடைதீர்கள் என்றால் தலையில் உள்ள பேன், ஈறு, ஒட்டு என அனைத்து பூச்சிகளும் இறந்து வந்திருக்கும்.
  • இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் போதும் தலையில் ஒரு பேன் கூட இருக்காது.

உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் பயன்படுத்தலாம்:

வேப்பிலை சாறு:

  • முதலில் 2 கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து அதில் உள்ள சாற்றினை மற்றும் நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  • இந்த சாற்றினை உங்கள் தலையில் அப்ளை செய்து 1 மணிநேரம் ஊறவைத்து பிறகு தலையை அலசி விடுங்கள்.
  • இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் போதும் தலையில் பேன் மற்றும் பொடுகு தொல்லை இருக்காது.

முடி கொட்டுன இரண்டே வாரத்தில் இடுப்பிற்கு கீழ் தலைமுடி வளர கற்றாழை ஒன்று போதும்.  எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement