Pen Thollai Neenga Tips in Tamil
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பலவகையான தலைமுடி பிரச்சனை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். அவற்றை எல்லாம் சரிசெய்வதற்கு நாம் பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் நிரந்தரமான பலனை அளிக்காது. ஏனென்றால் நாம் நமது தலையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளின் முக்கிய மூலமாக உள்ளவற்றை சரிசெய்வதில்லை. அதாவது நமது தலையில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளவை தான் இந்த பேன், ஈறு போன்றவை அதனால் தான் முதலில் நமது தலையில் உள்ள பேன், ஈறு போன்றவற்றை போக்கி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்றைய பதிவில் நமது தலையில் உள்ள பேன், ஈறு போன்றவற்றை நிரந்தரமாக போக்க உதவும் டிப்ஸ் ஒன்றை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Louse from Hair at Home in Tamil:
இயற்கையான முறையில் நமது தலையில் உள்ள பேன், ஈறு போன்றவற்றை நிரந்தரமாக போக்க உதவும் டிப்ஸ் ஒன்றை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பூண்டு – 4 பற்கள்
- எலுமிச்சை பழச்சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 6
- புதினா – 1 கைப்பிடி அளவு
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 பற்கள் பூண்டு, 1 கைப்பிடி அளவு புதினா, 1 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 6 மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பசையாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உங்க முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்க கசகசா போதும்
தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பின்னர் இதனை உங்கள் தலையில் தடவி 15 முதல் 30 நிமிடங்களுக்கு அப்படிவிடுங்கள். அதன் பிறகு நன்கு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள்.
இதனால் உங்கள் தலையில் உள்ள அனைத்து பேன் மற்றும் ஈறுகளும் நீங்கிவிடும்.
இந்த முடி எனக்கு போதும் என்று நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முடி வளர என்ன செய்யலாம்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |