1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க..!

Advertisement

Permanent Hair Straightening at Home Naturally  

தலைமுடியினை சாதாரணமாக பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சுருட்டையாக அல்லது கட்டையாக இருக்கும் முடியினை எப்படியாவது ஸ்ட்ரைட்னிங் செய்ய வேண்டும் என்பது ஒரு சிலருக்கு கூடுதலான பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் ஸ்ட்ரைட்னிங் செய்வது என்பது மிகவும் எளிமையானது என்று கூற முடியாது. ஏனென்றால் இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாலான நபர்கள் பார்லருக்கு சென்று மணிக்கணக்கில் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து தான் முடியினை ஸ்ட்ரைட்னிங் செய்து பராமரித்து வருகிறார்கள். ஆனால் இனி நீங்கள் பார்லருக்கும், செல்ல வேண்டாம் செலவும் செய்ய வேண்டாம். எனவே வீட்டில் இருந்தே எளியமையான பொருட்களை வைத்து எப்படி முடியினை ஸ்ட்ரைட்னிங் செய்வது என்றும் இன்றைய பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுருட்டை முடி நேராக வளர:

முதன்மை குறிப்பு:

 சுருட்டை முடி நேராக வளர

  • தேன்- 2 ஸ்பூன் 
  • பால்- 2 ஸ்பூன் 
  • ஸ்ட்ராபெரி- சிறிதளவு 

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் தேன் மற்றும் பாலை நன்றாக கலந்து கொண்டு அதற்கு அடுத்த படியாக ஸ்ட்ராபெயினையும் அதனுடன் சேர்த்து கலந்தால் ஹேர் பேக் தயார்.

அப்ளை செய்தல்:

தயார் நிலையில் உள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் அடி வரை அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து குளித்து விட வேண்டும்.

பயன்கள்:

பாலில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனால் பால் கலந்த ஹேர் பேக்கினை முடிக்கு அப்ளை செய்வதன் மூலம் முடி இயற்கையாவே மென்மையாகவும், நீளமாகவும் மாற்றுகிறது.

Life Style👇👇 எண்ணெய் வழியும் முகத்தை கூட பளபளப்பாக மாற்றலாம்..

இரண்டாவது குறிப்பு:

hair pack for hair straightening in tamil

  • முட்டை-
  • ஆலிவ் எண்ணெய்- 2

இப்போது மேல் கூறியுள்ள பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் 2 முட்டையினை உடைத்து ஊற்றி அதில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முட்டை ஹேர் பேக் ரெடி.

அப்ளை செய்தல்:

தயார் படுத்தியுள்ள முட்டை ஹேர் பேக்கினை முடியின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அப்ளை செய்து முடித்த 1 மணி நேரம் கழித்து முடியினை ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி அலசி விட வேண்டும்.

பயன்கள்:

ஆலிவ் எண்ணெய்  மற்றும் முட்டை இரண்டிலும் முடிக்கு ஊக்கமளித்து முடியினை சுருட்டையாக இருக்கும் முடியினை நேராக வைக்கும் சத்துக்கள் மற்றும் ஆற்றல்கள் உள்ளது. அதனால் இந்த ஹேர் பேக் உங்கள் முடியினை விரைவில் நேராக மாற்றி விடும்.

இத்தகைய ஹேர் பேக்குகளில் ஏதேனும் ஒன்றை தான் பின்பற்ற வேண்டும்.

Life Style👇👇 கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement