Permanent Skin Whitening at Home Naturally in Tamil
பொதுவாக தமிழில் முகத்திற்கு என்று ஒரு பழமொழி உள்ளது. அதாவது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஏனென்றால் நம்முடைய முகம் ஆனது நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக காட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட முகத்தினை எப்போதும் பளிச்சென்றும் பிரகாசகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் இல்லாமல் சிலருக்கு முகம் பளிச்சென்றும், வெள்ளையாகவும் மாற வேண்டும் என்ற பிரச்சனை ஆனது இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் முகம் இயற்கையாகவே பளிசென்றும், வெள்ளையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இயற்கையாக முகம் வெள்ளையாக:
பப்பாளியில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, மாங்கனீசு என இதுபோன்ற சத்துக்கள் ஆனது நிறைந்து இருக்கிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பப்பாளியை நாம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு உடலின் ஆரோக்கியமானது மேம்படும்.
ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கும் நல்ல பலனை அளிக்கும் ஒன்றாக பப்பாளி இருக்கிறது. அதனால் பப்பாளியுடன் சில பொருட்களை சேர்த்து முகத்திற்கு எப்படி அப்ளை செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- பப்பாளி- 1 துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
முதலில் எடுத்துவைத்துள்ள 1 துண்டு பப்பாளியை எடுத்துக்கொண்டு அதனை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு பப்பாளியில் இருக்கும் தோலினை நீக்கி விட வேண்டும்.
இப்போது ஒரு பவுலில் பப்பாளியில் இருக்கும் பேஸ்டை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும். இப்போது இயற்கையான முறையில் பப்பாளி Face Pack தயார்.
வாரம் 2 முறை தடவினால் போதும் வேகமாகவும், அடர்த்தியாகவும் முடி வளரும்
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள பப்பாளி பேஸ்டை நன்றாக முகத்தில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை முதலில் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும்.
இவ்வாறு செய்து முடித்த பிறகு மீண்டும் ஒரு முறை குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொலிவு இழந்த உங்களது முகம் பொலிவு பெரும். மேலும் முகம் விரைவில் வெள்ளையாகவும் மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |