15 நாட்களில் உங்களின் நிறத்தை அதிகரிக்க இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்..!

Advertisement

Permanent Skin Whitening Tips at Home in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தங்களின் முகம் என்றும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். அதனால் அதற்கான பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் சரியான மற்றும் சிறப்பான அளித்திருக்குமா என்றால் அது சிறிதளவு சந்தேகம் தான். அதனால் மிகவும் எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நமது முகத்தை எப்பொழுதும் இளமையாகவும் அழகாவும் வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து. அது என்ன குறிப்பு அதனை எவ்வாறு செய்வது என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Skin Whitening Home Remedies in Tamil:

Permanent Skin Whitening Home Remedies in Tamil

நாம் அனைவருக்குமே நமது முகத்தை மிகவும் அழகாக பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை பொடி – 100 கிராம் 
  2. ரோஜா இதழ் பொடி – 100 கிராம் 
  3. ஓரிதழ் தாமரை பொடி – 100 கிராம் 
  4. குப்பைமேனி பொடி – 100 கிராம் 
  5. ஆவாரை பொடி – 100 கிராம் 
  6. துளசி பொடி – 50 கிராம் 
  7. ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன் 

குங்குமப்பூ மட்டும் போதும் 5 நிமிடத்தில் சருமத்தை 2 மடங்கு பொலிவு பெற செய்யலாம்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் கற்றாழை பொடி, 100 கிராம் ரோஜா இதழ் பொடி, 100 கிராம் ஓரிதழ் தாமரை பொடி, 100 கிராம் குப்பைமேனி பொடி, 100 கிராம் ஆவாரை பொடி மற்றும் 50 கிராம் துளசி பொடி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு நாம் கலந்து வைத்துள்ள பொடியிலிருந்து 2 டீஸ்பூன் மட்டும் எடுத்து அதனுடன் 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் என்றும் இளமையாக இருப்பதை நீங்களே உணரலாம்.

முடி உதிர்வுக்கு பாய் பாய் சொல்லிட்டு முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement