முகப்பரு மறைய பாட்டி வைத்தியம்
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மற்றவர்களை விட அழகாக இல்லை என்றாலும் கூட தனது முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் தோன்றும் இயல்பான ஒன்று. இவ்வாறு நாம் தினமும் கனவு கண்டு கொண்டே இருப்போம். ஆனால் திடீரென்று பார்த்தால் முகத்தில் பருக்கள் வந்து விடும். பருக்கள் வந்தால் அதனை எப்படி மறைய வைப்பது என்று யோசித்து கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இவற்றில் எல்லாம் நமக்கு கிடைக்காத பலன் ஆனது நம்முடைய பாட்டி வைத்தியத்தின் மூலம் நிறைய நபருக்கு கிடைக்கும். அதனால் இன்று முகத்தில் காணப்படும் பருக்கள் மறைய பாட்டி சொல்லும் வைத்தியம் என்னவென்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Pimple Removal Home Remedies:
நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் வெந்தயத்தில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் கலோரிகள் என பலவகையான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- பால்- 1/2 டம்ளர்
முதலில் 2 ஸ்பூன் வெந்தயதை எடுத்து ஒரு பவுலில் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 மணி நேரம் வரை ஊறவைத்து விடுங்கள். பின்பு நன்றாக ஊறிய வெந்தயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா
இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் காணப்படும் பருக்களின் மீது அப்ளை செய்து விடுங்கள். மேலும் முகம் முழுவதும் அப்ளை செய்து விடுங்கள்.
முகத்தில் அப்ளை செய்த வெந்தயத்தை நன்றாக காய விடுங்கள். வெந்தயம் காய்ந்த பிறகு எடுத்துவைத்துள்ள காய்ச்சாத பாலினால் முகத்தை கழுவி விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் ஊறிய பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
இத்தகைய முறையினை தினமும் குளிக்க போவதற்கு முன்பாக செய்தால் போதும் முகத்தில் இருக்கும் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
முகம் எப்போதும் பளபளப்பாக வச்சுக்க பாட்டி சொன்ன ரகசியம் என்னன்னு தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |