Pimples Treatment at Home
ஒவ்வொரு பெண்ணும் முகத்தில் பருக்கள் இல்லாமல் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் இருப்பார்கள். ஒரு பெண் அழகாக இருந்தால் தான் நம்பிக்கை உடையவளாக இருக்கிறார்கள். பருக்கள் இருந்தாலும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உடைகள் மற்றும் நகைகள் என்று அணிந்து கொண்டாலும் பருக்கள் முக அழகை கெடுக்கும். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தினாலும் நாளடைவில் முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பருக்களை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முகப்பருக்களை நீக்குவது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்கு சாறு முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், பள்ளங்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. இதற்கு சிறிதளவு உருளைக்கிழங்கு எடுத்து சிறியதாக கட் செய்து மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த உருளைக்கிழங்கை வடிகட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் 2 சொட்டு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது போல் வாரத்தில் மூன்று நாட்கள் என்று 10 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் பருக்கள், பள்ளங்கள் மறைவதை காணலாம்.
2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க..!
தயிர் பேக்:
தயிர் மற்றும் உளுந்து தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு பவுலில் தயிர் சிறிதளவு, உளுந்து மாவு சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள், முகத்தில் உள்ள குழிகள் மற்றும் பருக்களை நீக்குவதற்கும் உதவுகிறது.
ஐஸ் பேக்:
ஐஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பருக்கள், பள்ளங்கள் மறைந்து விடும். இதற்கு சாதாரணமாக ஐஸ் பேக்பயன்படுத்தலாம். இருந்தாலும் உங்களுடைய சருமம் ஆயில் ஸ்கின் ஆக இருந்தால், கற்றாழை ஜெல், பப்பாளி, ஆரஞ்சு போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஐஸ் பேக் ஆக வந்ததும் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் உங்களுடைய முகம் பிரகாசமாக இருக்கும்.
நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |