பொடுகை அடியோடு விரட்ட இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..

podugu poga enna seivathu

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

முடி உதிர்ந்து கொண்டே இருக்கின்றது என்று கவலை படுவார்கள். ஆனால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கமாட்டார்கள். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் முடி உதிர்வு கட்டாயம் இருக்கும். அதனால் முதலில் பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். பொடுகு இருந்தாலே தலை அரித்து கொண்டே இருக்கும். சில நபர்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாகி சட்டையில் பொடுகு உதிரும். இதற்காக கடையில் விற்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்தினாலும் அவ்வப்போது வேண்டுமென்றால் பொடுகு இல்லாமல் இருக்கும். 3 நாள் கழித்து மறுபடியும் பொடுகு உருவாகும். அதனால் நிரந்தரமான முறையில் பொடுகு பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பொடுகு பிரச்சனைக்கு வீட்டு குறிப்புகள்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வேப்பிலை:

 பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும். இலையில் உள்ள சாயம் இறங்கியதும், அடுப்பை அணைத்து விடவும். தண்ணீர் ஆறியதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

பிறகு ஒரு பவுலில் வேப்பிலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலைமுடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு தலையை அலச வேண்டும்.

வெந்தயம்:

 பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 1 மணி வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். வாரத்தில் ஒரு நாள் இதை பேக்கை பயன்படுத்தலாம்.

முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா.. கடலை மாவை இப்படி பயன்படுத்துங்க

தேங்காய் எண்ணெய் எலுமிச்சை சாறு:

 பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்து சூடு படுத்தவும். இதனுடன் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி எடுத்து சூடுபடுத்திக்கொள்ளவும். இதனை தலையில் இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் தலை தேய்த்து குளிக்கலாம். இல்லையென்றால் 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கலாம்.

கற்றாழை ஜெல்:

 பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, ஆமணக்கு எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து ஏதவாது ஒன்றை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சனையை சரி செய்து விடலாம்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil