உருளைக்கிழங்கு ஒன்று போதும் உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்ய..!

Advertisement

முடி வளர்ச்சியை அதிகரிக்க உருளைக்கிழங்கு – Potato Juice for Hair Growth in Tamil

பொதுவாக சைவ மற்றும் அசைவ உணவுகளில் பயன்படுத்தும் ஒன்று தான் உருளைக்கிழங்கு. அசைவ உணவுகளில் வெறும் வாசனைக்காக  சேர்க்கப்பட்டாலும், சைவ உணவுகளில் செய்யப்படும் வறுவல் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இத்தகைய உருளைக்கிழங்கு சமையலுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை சில வகையான அழகு குறிப்புகளும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கருவளையம் மறைய உருளைக்கிழங்கில் உள்ள ஜூஸினை மட்டும் பிழிந்து கருவளையம் உள்ள இடத்தில் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் அப்ளை செய்து வந்தால் மறைந்துவிடுகிறதாம். என்ன உருளைக்கிழங்கை பற்றி இவ்வளவு சொல்றன்னு பாக்குறீங்களா?..  ஆமாங்க உருளைக்கிழங்கு பலவகையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

இந்த உருளைக்கிழங்கு தலைமுடியையும் வளர செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் மக்களே தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகளை வளர செய்கிறது. அது எப்படினு கேக்குறீங்களா.. அதை தெரிஞ்சிக்கணும்னா இந்த பதிவை முழுமையாக படியுங்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி உதிர்வு, வழுக்கை தலை, நரை முடி இந்த மூன்று பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெங்காயம்..

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – ஒன்று
  • முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று
  • தேன் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி பிறகு அவற்றில் இருக்கும் தோல் பாகுதியை சீவிவிடவும்.

இந்த தோலினை தூக்கி எறிந்துவிட வேண்டாம் 500 மில்லி தண்ணீரில் இந்த உருளைக்கிழங்கின் தோலினை போட்டு நன்றாக 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு தோல் சீவிய உருளைக்கிங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

பிறகு மிக்சி ஜாரில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அவற்றில் இருந்து சாறு பிழிந்து ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும், பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..

பயன்படுத்தும் முறை:உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்த கலவை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்யவும். பிறகு 30 நிமிடம் வரை காத்திருக்கவும்.

30 நிமிடம் கழித்து தலை அலசிவிட வேண்டாம். இப்பொழுது உருளைக்கிழங்கின் தோலை கொத்துக்கவைத்திருந்தோம் அல்லவே அதனை தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இந்த தண்ணீரை தலை முடியில் ஸ்ப்ரே செய்து 15 நிமிடம் காத்திருக்கவும்.

பிறகு எப்பொழுதும் போல தலை முடிக்கு ஷாம்பு போட்டு நன்றாக அலசவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

இவ்வாறு செய்து வருவதினால் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளரும், குறிப்பாக தலை முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை வளர செய்தும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement