வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

Premature Hair Greying Home Remedies in Tamil

இன்றைய சூழலில் உள்ள வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக இளமையிலே ஒரு சிலருக்கு நரைமுடி ஏற்படுகின்றது. அதனால் அதனை சரி செய்வதற்காக நீங்களும் பல வகையான ஷாம்பு மற்றும் ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அவற்றில்  கலந்துள்ள வேதிப்பொருட்கள் உங்களின் தலை முடிக்கு நன்மையை அளிப்பதற்கு பதிலாக பல வகையான தீமைகளை தான் அளிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு பயன்படும் வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் இளநரையை எவ்வாறு போக்குவது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் இளநரையை போக்கி முதுநரை விரைவில் வராமல் உங்கள் தலை முடியை பாதுகாத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Premature Grey Hair Home Remedies in Tamil:

Premature Grey Hair Home Remedies in Tamil

இயற்கையான முறையில் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் இளநரையை எவ்வாறு போக்குவது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

அதற்கு முன்னால் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வெட்டி வேர் – 30 கிராம் 
  2. தேங்காய் எண்ணெய் – 100 மி.லி  
  3. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  4. வேம்பாளை பட்டை – 5  
  5. ஆமணக்கு எண்ணெய் – 25 மி.லி 

இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 மி.லி தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.

வெட்டி வேரை சேர்க்கவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 30 கிராம் வெட்டி வேரை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

வேம்பாளை பட்டையை சேர்த்து கொள்ளுங்கள்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 5 வேம்பாளை பட்டையில் இருந்து 4 வேம்பாளை பட்டையை மட்டும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஆமணக்கு எண்ணெயை கலந்து கொள்ளவும்:

இப்பொழுது அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 25 மி.லி ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த ஒரே ஒரு வேம்பாளை பட்டையையும் சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தலைக்கு தடவி கொள்ளுங்கள். இதனால் உங்களின் இளநரை விரைவில் மறைவதை நீங்களே காணலாம்.

இந்த தண்ணீரை மட்டும் உங்க முடிக்கு தேய்த்தால் போதும்.. ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளரும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 

 

Advertisement