Remove Permanent Pimple at Home in Tamil
மனிதனாக பிறந்தரவர்களுக்கு ஒரு அடையாளத்தினையும், அவர்களுக்கான தோற்றத்தினையும் மற்றவர்களுக்கு எங்கு இருந்தாலும் எடுத்து காண்பிப்பது என்னவோ முகம். இப்படிப்பட்ட முகத்தினை எப்போதும் அழகாவும், பருக்கள் இல்லாமலும் தான் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவ்வாறு நினைத்த அடுத்த நொடியே முகத்தில் சிறிய பருக்களாவது வந்து விடுகிறது என்பது தான் சாத்தியமான கருத்து. முகத்தில் பருக்கள் வருவதோடு மட்டும் இல்லாமல் அவை கருப்புள்ளிகளாகவும் மாறிவிடுகிறது. ஆகவே இன்று வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டுமே வைத்து முகப்பருக்களை எவ்வாறு நீக்குவது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகப்பரு நீங்க கற்றாழை:
கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி, வயிற்று புண் என இவற்றை எல்லாம் சரி செய்வதோடு மட்டும் இல்லாமல் முகத்திற்கு அழகினையும், பருக்களை நீங்கவும் செய்கிறது.
- கற்றாழை ஜெல்- 1 தேக்கரண்டி
ஆகையால் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையிலும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை முகத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் போதும் முகத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
5 நிமிடத்தில் முகம் பிரைட்டாக இந்த பேஸ் பேக் மட்டும் போதும் |
முகப்பரு நீங்க வேப்பிலை:
வேப்பிலை பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருப்பதினால் முகத்தில் இருக்கும் கிருமி நாசினி முதல் பருக்கள் வரை என அனைத்தையும் மறைய செய்கிறது.
- வேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- மஞ்சள்- 1 ஸ்பூன்
1 கைப்பிடி வேப்பிலையை நன்றாக அலசி விட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் 1 ஸ்பூன் மஞ்சளை சேர்த்து நன்றாக கலந்து இரவு நேரத்தில் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையும் நீங்கி விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |