முகம் பளபளப்பாக இருக்க
முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காக கெமிக்கல் நிறைந்த விலையுயர்ந்த கிரீம்களை நிறைய பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்தும் போது அப்பொழுது ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் அவை முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழிமுறை தான் சிறந்தது. சில பேருக்கு முகத்தை பளபளப்பாக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகம் பொலிவு பெரும் என்பது தெரியும் ஆனால் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்கு தெரிவதில்லை இன்றைய பதிவில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை எவ்வாறு பயன்படுத்தினால் முகம் எப்போதும் பளிச் என்று இருக்கும் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Remove tan from face naturally at home in tamil
Tips 1:
ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர், உங்கள் முகத்தை ஒரு முறை கழுவி நனறாக துடைத்த பின்னர் தயாரித்துவைத்துள்ள பால், தேன் மற்றும் மஞ்சள் தூள் கலவையை முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.
20 நிமிடங்கள் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவதான் மூலம் முகம் பளபளப்பாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரு முறை செய்தால் போதும் உங்கள் முகம் கரும்புள்ளிகள் அற்று தெளிவாக மாறும்.
Tips 2:
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பால், கடலை மாவு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இந்த அரைத்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் பிறகு கழுவினால் உங்கள் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை உணருவீர்கள்.
இதனை வாரத்திற்கு இரு முறை செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |