மழைக்காலத்திலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க அரிசி தண்ணீருடன் இதை சேர்த்து தடவுங்க..!

Advertisement

முகம் பளபளப்பாக அரிசி தண்ணீர் 

நண்பர்களுக்கு வணக்கம்..! இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் சோவென்று மழை பெய்து கொண்டு தான் உள்ளது. பொதுவாக நம் அனைவருக்குமே எந்த சீசனிலும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் பெண்கள் ஒவ்வொரு சீசனிலும் தன் முகத்தை அப்படி தான் பராமரிப்பார்கள். அதுபோல ஒரு சில பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவென்றால், முகம் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் இல்லை என்பது தான். அதற்காக தான் கடைகளில் கிடைக்கும் கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முகத்திற்கு பாதிப்பு தான் வருமே தவிர, முகம் வெள்ளையாகாது. அதனால் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அரிசி தண்ணீருடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் தடவி பாருங்கள்..! முகம் பளபளப்பாக மாறுவதை காண்பீர்கள்..! சரி வாங்க நண்பர்களே இந்த மழைக்காலத்தில் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்..!

மழைக்காலத்தில் முகம் பளபளப்பாக இருக்க அரிசி தண்ணீர் போதும்..!

rice water with milk for skin

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு அரசி கழுவிய நீரை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும்.

பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி கொள்ளவும். இதுபோல ஒரு நாளுக்கு ஒரு தடவை முகத்தில் தடவி வந்தால் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.

மழைக்காலத்தில் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரியுமா

முகம் பளபளப்பாக இருக்க அரிசி தண்ணீர்:

rice water with milk for skin

  1. அரிசி கழுவிய நீர் – 1 ஸ்பூன்
  2. ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் அரிசி கழுவிய நீர், கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் மூன்றையும் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.

பின் அதை நன்றாக கிரீம் போல கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளவும்.

பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.

தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இந்த ஒரு ஸ்ப்ரே போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement