காப்பர் டி பயன்படுத்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Advertisement

காப்பர் T பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Copper t Side Effects in Tamil

பொதுவாக முதல் குழந்தை பெற்றடித்தபிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இடைவெளி வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தற்காலிகமாக பயன்படுத்தும் ஒரு சாதனம் தான் காப்பர் டி. இந்த சாதனத்தில் காப்பர் உள்ளத்தினாலும், பார்ப்பதற்கு T வடிவில் இருப்பதினால். இந்த சாதனத்திற்கு காப்பர் டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. சரி இந்த காப்பர் T பயன்படுத்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

காப்பர் T-யின் வேலை என்ன?

காப்பரால் செய்யப்பட்ட காப்பர் T-ஐ அணிந்துகொள்வதினால் உடலுறவு நேரத்தில் வெளிப்படும் விந்துகளின் வீரியத்தை அழித்துவிடும். இதை கருப்பைக்குள் வைத்தவுடன் இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது. இந்த திரவம் தான் விந்துக்களை கருமுட்டையுடன் சேரவிடாமல் தடுக்கிறது. காப்பர் டியில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவைகருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.

வகைகள்:

  1. Hormonal IUD
  2. Copper IUD

நன்மைகள்:Copper T

காப்பர் டி கருவுறுதலை மட்டும் தடுக்கக்கூடியது இல்லை. விந்தணுக்கள் பெண் உறுப்பின் வழியாக கருப்பையை வேகமாக நீந்தி செல்லும் போது விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது. காப்பர் டி யால் வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கருமுட்டைக்குள் விந்தணுக்கள் வருவதையும் தடை செய்கிறது.

​காப்பர் டி பொருத்திய பிறகு:

  • பெண்கள் காப்பர் டி பொருத்திய பிறகு அதிக ரத்தபோக்கு, மாதவிடாய் சீரற்று இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு பெண் உறுப்பில் வலி உண்டாகும், அசெளகரியம் இருக்கும் இவர்களும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
  • மேலும் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும் காப்பர் டி நூல் உங்களால் உணரமுடியும். நூல் கண்டறிவதில் சிரமம் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். காப்பர் டி பொருத்திய பிறகு கருத்தரித்த அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் கருவானது கருக்குழாயில் வளரவும் கூடும்.

பக்கவிளைவுகள் – Side Effects of Copper T in Tamil:

  • இந்த காப்பர் டி சாதனத்திற்கும் சில குறைபாடுகள் உள்ளது. ஆகையால் காப்பர் டி பொருத்தி கொண்ட பெண்கள் பெண் உறுப்பில் அசெளகரியத்தை உணருவார்கள். ஆக முறையான அனுபவம் பெற்ற மருத்துவரிடம் காப்பர் T -ஐ பொருத்தி கொள்ளவும்.
  • இந்த காப்பர் T சரியாக பொறுத்தப்படாத பட்சத்தில் அவை நோய்த்தொற்று உண்டாக்கிவிடும். தொற்றை சரிசெய்யாவிட்டால் அவை பெல்விஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். இதனால் இடைவிடாத ரத்த போக்கு, வெள்ளைப்படுதல், துர்நாற்றம் உண்டாகும்.
  • சிலருக்கு உடலுறவின் போது வலி அல்லது அசெளகரியம் உண்டாகும். மாதவிடாய் காலத்தில் வலி கூடுதலாக இருக்கும். எல்லோருக்கும் இவை உண்டாவதில்லை. உரிய முறையில் காப்பர் டி கர்ப்பபைக்குள் இல்லாமல் பொருத்தும் போதும் உரிய பரிசோதனை மேற்கொள்ளாத போதும் இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement