அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

Side Effects of Drinking Too Much Water in Tamil

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

இயற்கை நமக்கு அளித்த விஷயங்களில் ஒன்று தண்ணீர். இந்த தண்ணீரை நமது உடலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் நிலை சீராக இருக்கும். அதேபோல் இந்த தண்ணீரை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் உடலில் சிலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. சரி வாங்க அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்பது குறித்து இப்பொழுது நாம் படித்திரியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்  – Side Effects of Drinking Too Much Water in Tamil:Side Effects of Drinking Too Much Water in Tamil

அதிகளவு தண்ணீர் அருந்துவதால் உடலில் திரவம் வழிதல் மற்றும் சமநிலையின்மை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிகளவிலான நீர் உடலின் உப்பின் அளவைக் குறைத்து, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்கு ஹைபோநெட்ரீமியா என்று பெயர்.

அதிக தண்ணீர் அருந்துவதினால் எலக்ட்ரோலைட் அளவு குறைகிறது. எலக்ட்ரோலைட் அளவு குறைவாக இருக்கும்போது தசை வலி மற்றும் தசை பிடிப்புகள் போன்றவை ஏற்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புளுபெர்ரி பழத்தில் இந்த விஷயம் தெரியுமா.?

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் பணி அதிகரித்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீட்டிலோ, பணிபுரியும் இடத்திலோ அல்லது பள்ளியிலோ சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும், இது மிகவும் சிரமமாக இருக்கும்.

அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது உடலை சோர்வு அடைய ஏற்படுத்தும். அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்யும், இதனால் சில ஹார்மோன்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடலையும், மனதையும் சோர்வடையச் செய்யும்.

பல நாடுகளில் குழாய் நீரை சுத்தப்படுத்த குளோரின் பயன்படுத்தப்படுகிறது. அதிக குளோரினேட்டட் தண்ணீரை நீண்ட காலத்திற்கு உட்கொள்வது சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுபவரா நீங்கள்..! அப்போ இதை தெரிஞ்சுக்கிட்டு அப்பறம் சாப்பிடுங்க..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil