Simple Solutions for Depression in Tamil
இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுவது நமது பேசும் திறன், சிரிப்பது மற்றும் அழுவது போன்ற திறன்கள் தான். ஆனால் இப்பொழுது ஒருவர் மிகவும் வருத்தத்தில் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால் அவர் மற்றவர்களிடம் பேசுவது மற்றும் சிரிப்பது போன்ற அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து இல்லாமல் போகிவிடும். அதனால் தான் ஒரு நபர் மிகுந்த மன வருத்தத்தில் அல்லது அழுத்தத்தில் இருக்கின்றார் என்றால் அவர் எளிமையான முறையில் எவ்வாறு அவரது மன வருத்தம் அல்லது அழுத்தத்தில் இருந்து விடைபெறுவது என்பதற்கான சில குறிப்புகளை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மன அழுத்தம் குறைய எளிய வழிகள்:
நமக்கு உள்ள அனைத்து மன அழுத்தங்களும் குறைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சில எளிமையான குறிப்புகளை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
உடற்பயிற்சி:
பொதுவாக நமக்கு உள்ள மனச்சோர்வுக்கான சரியான காரணங்களை அறிவது மிகவும் கடினம் என்றாலும், அதிலிருந்து எளிமையாக விடைபெறுவதற்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த வழி ஆகும்.
உடற்பயிற்சினை செய்வதின் மூலம் நமது மனநிலையானது அமைதியாக இருக்கும். இதன மூலம் நமது மனதில் உள்ள அனைத்து அழுத்தங்களும் நீங்கி நமது மனமானது மகிழ்சியாக இருக்கும்.
ஒளி சிகிச்சை:
மனச்சோர்வுக்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் இந்த ஒளி சிகிச்சை. இந்த ஒளி சிகிச்சையானது மிதமான மனச்சோர்வுக்கான ஒரு அற்புதமான மாற்று இயற்கை சிகிச்சையாகும்.
ஒளி வெளிப்பாடு செரோடோனின் உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் உங்கள் மூளையில் உள்ள இந்த இன்றியமையாத இரசாயனமானது மனநிலையை ஒழுங்குபடுத்துவதோடு தொடர்புடையது. அதனால் உங்களின் மன அழுத்தமானது குறைய தொடங்கும்.
தியானம்:
தியானம் என்பது ஒரு பழங்கால கலையாகும். இது கவலை, மனஉளைச்சல் சீர்குலைவு மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல மனநல நிலைமைகளில் நம்பமுடியாத மாற்றங்களை மற்றும் நன்மைகளை அளிக்கின்றது.
உங்கள் மனதை அமைதிப்படுத்த இந்த தியானம் உதவும். இதன் மூலம் உங்களின் மன அழுத்தம் படி படியாக குறைய தொடங்கும்.
எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்வது
சரியான தூக்கம்:
நாம் சரியாக தூக்கம் தூங்கினாலே நமது மன அழுத்தமானது ஏற்படவேபடாது. தூக்கக் கோளாறுகள் கடுமையான மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகின்றன.
அதனால் நாம் சரியான முறையில் தூங்கி நமது மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும்.
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது:
அமெரிக்க உளவியல் சங்கம் (APA) மேற்கொண்ட ஆய்வுகள், இயற்கையும் மனநிலையும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
இயற்கையானது நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது உளவியல் நல்வாழ்வு ஆகிய இரண்டிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் சான்றுகள் தொடர்ந்து காணப்படுகின்றன. அதனால் நாம் தினமும் சில மணிநேரம் இயற்கையுடன் நமது நேரத்தை செலவிட்டால் நமது மனமானது மிகவும் அமைதி பெரும்.
மனஅழுத்தம் நீங்கி தூக்கம் நன்றாக வர இதை செய்யுங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |