முகம் கண்ணாடி போல் மின்ன 1 தக்காளி போதும்..!

Advertisement

Skin Whitening Face Pack Homemade in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். அழகுக்காகவே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அதிலும் முகம் வெள்ளையாக மாறவேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை வெள்ளையாக மாற்றுங்கள்..! சரி வாங்க நண்பர்களே தக்காளியை வைத்து முகத்தை எப்படி பளபளப்பாக மாற்றுவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

1 தக்காளியின் அதிசயம்: 

tomato face pack

தக்காளியில் இருக்கும் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். தக்காளியில் இருக்கும் சத்துக்கள் இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. முகப்பருக்கள் வருவதை தடுத்து கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. அதனால் தக்காளியை எந்த பயமும் இல்லாமல் முகத்திற்கு பயன்படுத்தலாம்.

  1. தக்காளி சாறு – 3 ஸ்பூன்
  2. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  3. அரிசி மாவு – 1 ஸ்பூன்

முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு தக்காளி சாறு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் அரிசி மாவு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த குளிர்காலத்திலும் உங்க முகம் வெள்ளி கிண்ணம் போல் ஜொலிக்கணுமா

அவ்வளவு தான் முகத்தை வெண்மையாக்கும் பேஸ் பேக் ரெடி.

அப்ளை செய்யும் முறை: 

முதலில் இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை சுத்தமான நீரால் கழுவி கொள்ளுங்கள். பின் முகத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட்டு, நாம் தயார் செய்து வைத்திருக்கும் பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

இந்த பேஸ் பேக்கை குறைந்தது 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் கழுவி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறுவதை நீங்களே காண்பீர்கள்.

நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement