Skin Whitening with Lemon Home Remedies
இன்றைய காலகட்டத்தில் முகத்தை வெள்ளையாக்கக்கூடிய பல விதமான க்ரீம்கள் வந்துவிட்டது. ஆகையால், பெரும்பாலான பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த க்ரீம்கள் அனைத்தும் முகத்தை வெள்ளையாக்கினாலும் நாளடைவில் பல சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆகையால், முகத்தை வெள்ளைப்படுத்த இயற்கையான வழிதான் சிறந்தது.
உங்கள் முகத்தை இயற்கையான முறையில் நீங்கள் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் வைத்து கொள்ள விரும்பினால் எலுமிச்சை பழம் ஒன்று போதும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில், சருமத்தை வெள்ளையாக்க எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Lemon Home Remedies For Face in Tamil:
ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை:
எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து உலர்ந்ததும் முகத்தை கழுவிவிட வேண்டும். இந்த முறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், சருமம் வெள்ளையாவதோடு முகத்தில் இருக்கும் தழும்புகள் உள்ளிட்டவையும் மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர வைத்து அதன் பிறகு, முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் தினமும் செய்து வருவதன் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
பனிக்காலத்தில் முகத்தை பளபளப்பாக தேனுடன் இதையும் சேர்த்து அப்ளை செய்யவும்..
பால் மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறுடன் சில துளிகள் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் அப்ளை செய்து உலர விட்டு அதன் பிறகு தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.
முட்டை மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நனவு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து உலரவிட்டு அதன் பிறகு முகத்தை நன்கு கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |