இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

Advertisement

Summer Hair Care Tips in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிராமல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள், ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துவோம். இதனால் என்ன பயன் இருக்கிறது சொல்லுங்கள். இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்துவிடும். அதுபோல பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். மேலும் அனைவருக்கும் முடி கொட்டுவது என்பது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் சரி செய்வது தான் நல்லது. எனவே இந்த பதிவில் கூறும் தண்ணீரை தலையில் அப்ளை செய்து பாருங்கள். உதிர்ந்த முடி அனைத்தும் திரும்ப வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

Summer Hair Care Tips Home Remedies in Tamil: 

Summer Hair Care tips

  1. வேப்பிலை – சிறிதளவு அளவு
  2. வெந்தயம் – 1 கப்
  3. கருவேப்பிலை – சிறிதளவு அளவு
  4. இஞ்சி – 1 சிறிய துண்டு
  5. தண்ணீர் – தேவையான அளவு

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின் அதில் வெந்தயம், கருவேப்பிலை, வேப்பிலை மற்றும் இஞ்சி இவற்றை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

மத்தவங்க எவ்ளோ கலரா இருக்கீங்கனு சொல்லுவாங்க.. அதுக்கு இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க

Summer Hair Care tips

தண்ணீர் நன்றாக கொதித்து பொருட்களின் நிறமும் தண்ணீரின் நிறமும் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

இந்த தண்ணீரில் பல சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இன்று நாம் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வெந்தயம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, முடியை வேகமாக வளர செய்கிறது. வேப்பிலை முடிக்கு வலிமையை கொடுத்து முடியை ஆரோக்கியமாக வளர செய்கிறது. கருவேப்பிலை முடியை கருமையாக வளர செய்கிறது. எனவே இந்த பொருட்கள் சேர்ப்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.

இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க

பயன்படுத்தும் முறை: 

நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள தண்ணீரை தலையின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதே நிலையில் 30 நிமிடம் வரை அப்படியே வைத்திருந்து பின் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாக அலசி கொள்ள வேண்டும்.

இதுபோல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் உதிர்ந்த முடி அனைத்தும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement