அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு
பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்:
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கியம் சத்தான உணவுகளை உண்ணுவது. நெல்லிக்காய், முருங்கை கீரை, வெந்தயம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள், வேர்க்கடலை, காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்
வெங்காய சாறு:
வெங்காயச் சாற்றில் உள்ள பைட்டோகெமிக்கல் முடி வளர்ச்சியை தூண்டும். வெங்காய சாறு முடியின் அடிவரை சென்று முடியின் உறுதியை அதிகரிக்க உதவுகிறது.
இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயங்களை எடுத்து அதனை நன்றாக அரைத்து அதன் சாற்றை நன்கு வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய சாற்றை உங்கள் தலையில் நன்றாக தெளித்து மஜாஸ் செய்யவும். குறைந்தது 30 நிமிடங்கள் வரை உலர வைத்துவிட்டு பிறகு தலையை நன்றாக குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் உங்கள் முடியின் அதிகரிக்கும்.
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெயில் ஈரபதமாக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இவை தலையில் உள்ள பொடுகை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் உங்கள் முடிக்கு தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்து 10 நிமிடம் சூடுபடுத்தவும். இந்த எண்ணெயின் சூடு ஆறியதும் தலை முடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
பயங்கரமா முடி கொட்டுகிறதா.. கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க..
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வந்தால் முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செய்யலாம்.
நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |