வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

Tan Removal Face Pack At Home in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இப்போது வெயில் காலம் நடந்து கொண்டிருக்கிறது. என்ன தான் நாம் இந்த வெயில் காலத்தில் 2, 3 முறை குளித்தாலும் வியர்த்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இந்த வெயில் காலத்தில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது முக கருமை தான். பொதுவாக பெண்கள் அனைவருமே முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் இந்த வெயில் காலத்தில் முகம் கருத்து போய்விட்டது என்று சொல்லி புலம்புவார்கள். அதனால் இன்று அவர்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ் கொண்டு வந்துள்ளேன். அதுவும் இயற்கையான முறையில். சரி வாங்க நண்பர்களே அந்த டிப்ஸை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முக கருமை நீங்க இயற்கை டிப்ஸ்:

முக கருமை நீங்க இயற்கை டிப்ஸ்:

  1. கற்றாழை
  2. தேன் – 2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்கள் முகத்திற்கு தேவையான கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும். பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து கொள்ளவும். அடுத்து மஞ்சள் தூள் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி. இப்பொழுது இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம்.

இவ்ளோ முடியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.. அதற்கு இந்த 2 பொருளை எண்ணெயில் சேர்த்து தடவுங்க

முகம் பொலிவுடன் இருக்க டிப்ஸ்: 

முக கருமை நீங்க டிப்ஸ்

 

  1. காபி தூள் – 2 ஸ்பூன்
  2. தயிர் – 1 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – சிறிதளவு

கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு காபி தூள் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து கொள்ளவும். அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளவும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் வெயில் காலத்திலும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement