Tan Removal Home Remedies in Tamil
என்ன நண்பர்களே வெயில் கொழுந்துவிட்டு எரிகிறதா..? என்னத்த சொல்றது வெளியில் தலை காட்டவே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு வெயில் அடிக்கிறது என்று நாம் அனைவருமே புலம்பி கொண்டு இருக்கின்றோம். அதிலும் பெண்கள் இந்த வெயிலில் முகம் கருத்து விடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. அதனால் இன்று இயற்கையான முறையில் முக கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Tan Removal Home Remedies in Tamil:
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு கடலை மாவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தயிர் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான். தயிரில் புரோபயாடிக், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்கிறது. கடலை மாவு சருமத்தில் இருக்கும் வறட்சியை நீக்கி முகத்தை பொலிவுடன் வைத்து கொள்கிறது.
அதனால் இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ள வேண்டும். பின் உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் முக கருமை நீங்கும்.
கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க |
Tan Removal Home Tips in Tamil:
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- தேன் – 1 ஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் 1 எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் எலுமிச்சை பழத்தில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது. மேலும் இது கரும்புள்ளிகளை மறைய செய்யும் தன்மையை கொண்டுள்ளது. தேன் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பிரகாசிக்க செய்கிறது.
அதனால் எலுமிச்சை சாறு மற்றும் தேனை நன்றாக கலந்து, அதை ஒரு காட்டன் துணியை வைத்து நனைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவி கொள்ளவும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் முக கருமை நீங்கும்.
செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |