ஒரு முறை தடவி பாருங்க..! தூங்கி எழும் போது ஒரு பேன் கூட இருக்காது..!

Advertisement

பேன் தொல்லை நீங்க | Pen Thollai Neenga Tips in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை என்றால், அது முடி உதிர்வு, பொடுகு தொல்லை, ஈறு பேன் தொல்லை, நரைமுடி இவைகள் தான். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் அந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களையும் ஷாம்புக்களையும் வாங்கி பயன்படுத்துகின்றோம். இதனால் முடிக்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுபோல ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்க கூடிய பிரச்சனை என்றால், அது ஈறு, பேன் தொல்லை தான். இதனை சரி செய்வதற்கு கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது தான் சரியானது. அதனால் இன்று ஒரே இரவில் பேன் தொல்லை முற்றிலும் நீங்க டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஒரே இரவில் பேன் தொல்லை நீங்க டிப்ஸ்: 

பேன் தொல்லை நீங்க

  1. பூண்டு –
  2. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

முதலில் 4 பூண்டு பற்களை எடுத்து கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கிவிட்டு அதை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பேனை 1 நாளில் விரட்டும் மருந்து தயார்.

தலையில பேனா இருக்கா எந்த ஹேர் ஸ்டைலும் பின்ன முடியலையா.! இந்த ஒன்னு போதும் பேனை விரட்டியடிக்க

பேன் தொல்லை நீங்க

பொதுவாக பூண்டில் இருக்கும் சத்துக்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்த பூண்டில் இருந்து வரும் வாசனை பேன்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதுபோல எலுமிச்சை சாறில் இருக்கும் பண்புகள் தலையிலும், முடியிலும் இருக்கும் கிருமிகளை அழிக்கக்கூடியது.

மேலும் சிலர் எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் முடிக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்று நினைப்பார்கள். ஆனால் இந்த எலுமிச்சை சாற்றில் இருக்கும் இயற்கை பண்புகள் முடிக்கு எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

அப்ளை செய்யும் முறை: 

இப்போது இந்த பேக்கை உங்கள் தலையில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் தலையில் தேங்காய் எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் அடி முதல் நுனி வரை நன்றாக தடவி கொள்ளுங்கள்.

முடி கொட்டுன இரண்டே வாரத்தில் இடுப்பிற்கு கீழ் தலைமுடி வளர கற்றாழை ஒன்று போதும்.  எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.

பின் நாம் தயார் செய்து வைத்துள்ள பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்டை முடியின் அடிப்பகுதியில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள்.

காலையில் எழுத்து பேன் சீப்பை கொண்டு சீவினால் ஈறு பெண் அனைத்தும் இறந்து வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் பிறகு நெனெகல் உங்கள் தலையை அலசி கொள்ளலாம்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல ரிசல்ட்டை காணலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement