முடி அடர்த்தியாக வளர வெந்தயம்
பொதுவாக நாம் ஒவ்வொரு நாளும் நமது முடியினை பராமரித்து வரவில்லை என்றாலும் கூட வாரத்திற்கு ஒரு முறையாவது பராமரித்து வரும். இத்தகைய பராமரிப்பு என்பது பெரும்பாலும் முடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனது முடி நீளமாக இல்லை என்றாலும் கூட அடர்த்தியாக வளர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் கடையில் விற்கும் ஷாம்புகளை தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சாம்பில் இருக்கும் சத்துக்களை விட நம்முடைய வீட்டில் இருக்கும் வெந்தயத்தில் தான் அதிகமாக சத்துக்கள் நிறைந்து உள்ளது. ஆகவே இந்த பதிவில் முடி அடர்த்தியாக வளர வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Thick Hair Tips Home Remedies:
வெந்தயத்தில் நமது முடிக்கு தேவையான அடிப்படை சத்துக்கள் அனைத்தும் இருப்பதனால் இதனை நாம் ஹேர் பேக்காக செய்து பயன்படுத்துவது நல்லது.
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கறிவேப்பில- 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை-1 கைப்பிடி
- செம்பருத்தி பூ- 5
- முட்டை- 1
மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க
வெந்தயம் ஹேர் பேக்:
முதலில் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதனை குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைத்து விடுங்கள்.
அதன் பிறகு 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளை சுத்தம் செய்து அலசி வைத்து விடுங்கள்.
இப்போது ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ மற்றும் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.
அடுத்து 1 முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வெள்ளை கருவினை அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டில் நன்றாக 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள்.
கடைசியாக கலந்து வைத்துள்ள பேஸ்ட்டினை முடியின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து ஷாம்பு வேண்டும் என்றால் பயன்படுத்தி தலை அலசி விடுங்கள்.
இத்தகைய முறையினை வாரம் 3 முறை செய்து வருவதன் மூலம் தலையில் பொடுகு எதுவும் இருந்தால் அவை நீங்கி முடி அடர்த்தியாக விரைவில் வளரும்.
இந்த முடி எனக்கு போதும் என்று நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முடி வளர என்ன செய்யலாம்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |