Thickness Hair Pack in Tamil
பொதுவாக நம் அனைவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை இருக்கும். ஆனால் இங்கு அதிகளவு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலை பிரச்சனை தான். தலை முடி பிரச்சனை என்றால் கொட்டுவது, பொடுகு, வெள்ளை முடி என இதுபோன்ற பிரச்சனை உள்ளது. இது அனைத்தையும் சரி செய்யும் விதமாக நிறைய எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், என நிறைய பயன்படுத்தியும், தலை முடி பிரச்சனை இருந்துகொண்டு தான் உள்ளது. அதேபோல் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அதிகமாக கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்தாமல் மிகவும் ஈஸியாக இயற்கை முறையில் எப்படி முடியை கொட்டாமல் வர வைக்க சூப்பராக டிப்ஸ்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Thickness Hair Pack in Tamil:
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி இலை: இந்த செம்பருத்தி இலை இயற்கையான ஷாம்பு. இதனை நாம் எடுத்துக் கொள்வதால் புது முடி கருமையாக வளரவும், முடி கருமையாக மாறவும் இது உதவி செய்யும்.
முருங்கை இலை: முருங்கைக் கீரையில் நிறைய வைட்டமின் உள்ளது. இது நம்முடைய முடியை வலிமையாக வளர உதவி செய்யும். முடி வெடிக்க விடாமல் வலிமையாக வளர வைக்கும்.
வெந்தயம்: இது முடியை கொட்டாமல் வளரவும், அதேபோல் பொடுகு இல்லாமலும் வளர வைக்கும். அதேபோல் இது வெயில் காலத்திற்கு மிகவும் நன்மையை அளிக்கும்.
வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்.. அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்
செய்முறை:
முதலில் செம்பருத்தி இலை, முருங்கைக்கீரை இந்த இரண்டு இலையையும் கழுவி ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து நாம் வெந்தயத்தை ஊறவைத்து 2 டேபிள் ஸ்பூன் எடுத்து அதே மிக்சி ஜாரில் போட்டு அதனை அப்படியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனை அப்படியே ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி
இதனை அப்படியே தலைமுடியில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பின்பு ஷாம்பு, சீயக்காய் போட்டு குளித்துக்கொள்ளவும். இது போல் வாரம் ஒரு முறை செய்தால் போதும் தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வர வைக்கும்.
செம்பருத்தி பூ மட்டும் போதும் 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |