இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்..!

Advertisement

Tips for Face Glow and Fairness in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் அழகாக பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக நமக்கு மிகுந்த அழகினை சேர்ப்பது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தை  நம்மால் சரியாக பராமரிக்க முடிவதில்லை. இதற்கு காரணம் இன்றைய அவசர காலகட்டம் மற்றும் நமக்கு உள்ள அதிக அளவு வேலைகள் தான். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அனைவருக்குமே பயன்படும் வகையில் மிகவும் எளிமையான முறையில் நமது முகத்தை பளிச்சென்று மற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Skin Whitening Tips in Tamil:

Permanent Skin Whitening Tips in Tamil

இயற்கையான முறையில் உங்களின் முகத்தை பளபளப்பாக மற்ற உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

இந்த குறிபிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

  1. பச்சைப்பயிர் – 1/2 கிலோ 
  2. ரோஜா இதழ்கள் – 4 கைப்பிடி அளவு 
  3. வெட்டிவேர்- 100 கிராம் 
  4. ஆவாரம்பூ – 2 கைப்பிடி அளவு 
  5. துளசி – 2 கைப்பிடி அளவு 
  6. வேப்பிலை – 2 கைப்பிடி அளவு 

இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க முதுமையில் கூட நரைமுடி வராது

படி – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கிலோ பச்சைப்பயிர், 4 கைப்பிடி அளவு ரோஜா இதழ்கள், 100 கிராம் வெட்டிவேர், 2 கைப்பிடி அளவு ஆவாரம்பூ, 2 கைப்பிடி அளவு துளசி மற்றும் 2 கைப்பிடி அளவு வேப்பிலை ஆகியவற்றை 2 முதல் 3 நாட்களுக்கு நன்கு காயவைத்து கொள்ளுங்கள்.

படி – 2

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் காயவைத்து எடுத்து வைத்துள்ளவற்றை போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

படி – 3

இதனை குளிக்க செய்வதற்கு முன்னாலும் உங்களின் முகத்தில் தடவி கொண்டு குளிக்கலாம் அப்படி இல்லை குளிக்கும் பொழுதும் தடவி குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் முகம் நிலவுடன் போட்டி போடுகின்ற அளவிற்கு பளபளப்பாக மாறும்.

5 நாட்களில் கழுத்தில் உள்ள கருமை மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement