Tips for Glowing Skin Naturally at Home in Tamil
இன்றைய சூழலில் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது தன்னை பார்த்து மற்றவர்கள் மிகவும் அழகாக இருக்கின்றாய் என்று கூற வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களை பார்த்து அனைவருமே மிகவும் அழகாக இருக்கின்றாய் என்று கூற வேண்டும் என்ற ஆசை மிகவும் அதிகமாக இருக்கும். நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் எடுத்துக்காட்டுவது நமது முகம் தான். அதனால் அதனை எப்பொழுதும் அழகாகவும் பொலிவாகம் வைத்திருக்க நினைப்போம். அதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அவையாவும் சில மணிநேரம் அல்லது சில நாட்களுக்கு கூட இருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பதற்கான சில குறிப்புகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies for Glowing Skin in Tamil:
யியற்க்கையான முறையில் உங்களின் முகத்தை என்றும் பளபளப்பாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
டிப்ஸ் – 1
முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் அதனின் அளவுகளை பார்க்கலாம்.
- தேன் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள். பொதுவாக தேனில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
இத்தனை சத்துக்கள் நிறைந்த தேனை முகத்திற்கு அப்ளை செய்வதன் முகம் இயற்கையாகவே முகம் பளபளப்பாக மாறிவிடும்.
கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக காபி தூளை இப்படி பயன்படுத்துங்க போதும்
டிப்ஸ் – 2
தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காபித்தூள் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள். கற்றாழையில் உள்ள சத்துக்கள் முகம், தலை முடி மற்றும் ஆரோக்கியம் இவை அனைத்திற்கும் சிறந்த ஒரு பலனை அளிக்கிறது.
ஆகையால் கற்றாழை ஜெல்லினை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முகம் பளபளப்பாக மாறிவிடும்.
ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
டிப்ஸ் – 3
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- தேன் – 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்குமாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை முதலில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
தயிரில் மற்ற பொருட்களை விட அதிகமான புரதசத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் தயிர் மற்றும் தேன் இரண்டையும் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகம் இயற்கையாகவே பளபளப்பாக மாறிவிடும்.
புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |