இயற்கையான பொலிவிற்க்கு
நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை தான். பளபளப்பான சருமத்திற்கான எண்ணற்ற கிரிம்கள் சந்தையில் உள்ளன. அவை நமது சரும ஆரோக்கியத்திற்கு பொருத்தமானத என்றால் கேள்விக்குறி தான். என்ன தான் விலை உயர்ந்த பல பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் இயற்கை பொருட்களில் கிடைக்கும் சரும பொலிவு அதில் கிடப்பது இல்லை. விலையுயர்ந்த பொருட்களில் ஏற்படும் சரும பொலிவு சில மணி நேரங்களுக்கு மட்டும் தான். ஆனால் இயற்கை பொருட்களில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை எப்போதும் இயற்கையான பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும். அப்படி உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள சில இயற்கை குறிப்புகள் உங்களுக்காக.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
பழமையான ஆயுர்வேதத்தில், முக அழகின் ரகசியங்கள் புதைந்து இருக்கிறது. ஆயுர்வேதம் இயற்கையான முறையில் சருமத்தினை சுத்தப் படுத்தி, பளிச் என்ற பொலிவை தருகிறது. முகம் இயற்கை பொலிவை அடைய நமது வீட்டில் இருக்கும் அடிப்படை பொருட்களை கொண்டே நாம் நமக்கு தேவையான அழகு சாதன பொருளை உருவாக்கலாம்.
Tips 1:
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 5 தேக்கரண்டி
சந்தனத் தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
பச்சை கர்ப்பூரம் -1
பால்,பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர்
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் பாலுடன் கடலை மாவு, சந்தனத் தூள்,
கடலை மாவு, சந்தனத் தூள், பச்சை கர்ப்பூரம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கிரீம் போல் உருவாக்கி கொள்ளவும்.
இதனை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் ஒரு காட்டன் துணியில் பன்னிர் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு மெதுவாக முகத்தை துடைக்கவும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவலாம்.
இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்வதன் மூலம் உங்கள் முகம் புத்துணர்ச்சி உடன் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
Tips 2:
வாரமொரு முறை ஆலிவ் எண்ணைகளை கொண்டு முகத்திற்கு மெதுவாக மசாஜ் செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய்யுடன், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வதால் முகம் புது பொலிவுடன் பிரகாசமாக இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
சட்டுனு நரைமுடி கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |