30 நாட்களில் முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்க பாட்டி சொன்ன சின்ன வைத்திய முறை..!

Advertisement

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க

பொதுவாக பெண்களுக்கு நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தல் அழகு தரும். நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் ஆசையாக இருக்கும். ஆனால், நீளமான கூந்தல் வேண்டுமானால் அதற்கு போதுமான பராமரிப்பு தேவை.  பெரும்பாலான பெண்கள் பொடுகு, முடி உதிர்தல் போன்றமுடி தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் முடியினை சரியாக பராமரிக்காமல் விடுவதால் நாம் எண்ணுவது போல் முடி வளருவதில்லை. அப்படி நீளமான அடர்த்தியான முடி வேண்டுமானால் முடிக்கு இயற்கை பராமரிப்பு அவசியம்.

முடி உதிர்வை குறைக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வீட்டு இயற்கை வைத்திய முறை நல்ல பயன்களை தரும். சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் இன்று இயற்கை முறையில் 30 நாட்களில் முடி உதிர்வை குறைத்து வேகமான முடியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

30 நாட்களில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க:

வெந்தயம் அதிக மருத்துவ பயன்கள் நிறைந்தது. வெந்தயம் உடல் வெப்பத்தை தனித்து நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

வெந்தயம் நமது அன்றாட சமையல் தேவைங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பருத்தி இலை முடியின் ஆரோக்கியத்திற்கு போதுமானதாக காணப்படுகிறது. செம்பருத்தியை உள்ள வைட்டமின் C பொடுகு பிரச்சனையை போக்க உதவுகிறது.

முடியில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கிமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஒரு குறிப்பு.

தேவைப்படும் பொருட்கள்:

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க

வெந்தயம்
செம்பருத்தி

தயாரிக்கும் முறை:

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் ஊறவைத்த வெந்தயம் மற்றும் செம்பருத்திகளை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது அதில் ஜெல் திரவம் உருவாகும் அதனை முடிந்தவரை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது முடி முதிர்வை கட்டுப்படுத்தும் இயற்கையான ஹேர் பேக் தயார்.

முடி உதிர்வை தடுக்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்..!

பாயன்படுத்தும் முறை:

நீங்கள் தயாரித்த ஹேர் பேக்கை உங்கள் முடியின் வேர் முதல் அனைத்து பகுதிகளிலும் தடவி குறைந்தது 15  வரை மசாஜ் செய்யுங்கள். பின்னர் கெமிக்கல் கலக்காத பொருட்களை பயன்படுத்தி தலையை சுத்தமாக அலசவும்.

இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களால் முடியின் வளர்ச்சியை உங்களால் பார்க்க முடியும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement