7 நாளில் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் போதும்.

Advertisement

ஆரோக்கியமான கூந்தலுக்கு வீட்டு வைத்தியம் 

பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நீளமான முடி வளர்ச்சிக்கு வீட்டு வைத்தியம்:

வெந்தயம் உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவு பொருளாகும். உடல் சூட்டிற்கு மட்டும்மல்லாமல் நமது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த வெந்தயம் இன்றியமையாது.

வீட்டில் இருக்கும் இதனை பயன்படுத்தால் போதும் உங்கள் முடியில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள் 

top hair care tips

வெந்தயம்- 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

வெந்தயத்தை 8 மணிநேரங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். 8 மணி நேரத்திற்கு பிறகு வெந்தயத்தை பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அந்த வெந்தய கலவையில் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்கி உங்கள் முடியின் உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும்.

உங்கள் முடியின் அடி முதல் நுனி வரை தேய்த்து குளிக்கவும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement