Underarm Hair Removal Cream at Home in Tamil
இன்றைய அவசர காலகட்டத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் அழகினை பராமரிப்பதற்கு நேரமில்லாமல் சந்தைகளில் விற்கப்படும் பல வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட அழகுசத்தான பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்து பொருட்களால் நமது உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகினை மேம்படுத்தி கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகினை மேம்படுத்தி கொள்ள உதவும் ஒரு சில குறிப்புகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று உங்களின் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை எந்த ஒரு வலியும் ஏற்படுத்தாமல் இயற்கையான முறையில் நிக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Underarm Hair Removal at Home in Tamil:
இயற்கையான முறையில் உங்கள் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை போக்க உதவு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்பு இந்த குறிப்பிற்க்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்.
- பீட்ரூட் பவுடர் – 1 டீஸ்பூன்
- காபித்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
தலைமுடி அடர்த்தியாக வளரவேண்டுமா அப்போ இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்
கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் பீட்ரூட் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் காபித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
மஞ்சள்தூளை கலந்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை கலக்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்து 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் அக்குள் பகுதியில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து நன்கு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி உங்களின் அக்குள் பகுதியை சுத்தம் செய்தீர்கள் என்றால் அங்கு இருந்த முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |