முகத்தில் உள்ள கரும்புள்ளியை மறைக்க எலுமிச்சை பழம் மட்டும் போதும்..

Advertisement

Use Lemon to Remove Dark Spots in Tamil

முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். ஆனால் நாம் கையை வைத்து கொண்டு சமம் இருக்காமல் பருக்களை நோண்டி கொண்டே இருக்கிறோம். பருக்களானது நாளடைவில் தழும்புகளாக மாறி முகத்தின் அழகை கெடுக்கிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த கரும்புள்ளிகளை இயற்கையான முறையில் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளி நீங்க:

கரும்புள்ளி நீங்க

உருளைக்கிழங்கில் இருக்கும் பண்புகள் கருமை மற்றும் கரும்புள்ளிகள், தழும்புகளை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது.

எலுமிச்சை பழத்தில் இருக்கும் அசிட்டிக் அமிலம் கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

எலுமிச்சை பழம் பேக் செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின் அதை காய் சீவும் கட்டையில் வைத்து நன்றாக சீவி கொண்டு உருளைக்கிழங்கை பிழிந்து அதன் சாறை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

மூன்று நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இதை ஒரு தடவை மட்டும் பயன்படுத்தி பாருங்க..

பின் அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து எடுத்து கொள்ளவும். அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து பின் அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் முகத்தில் 10-லிருந்து 15 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள்.

இது போல வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய தொடங்கும்.

உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement