இந்த ஒரு பொருளை உதட்டில் தடவி வந்தால் போதும்.. உதடு சிவப்பழகு பெறும்..!

Advertisement

Uthadu Sivappaga

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அனைவருமே தாம் அழகாக இருக்க வேண்டும் தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் பலபேருக்கு முகம் பொலிவிழந்து போகிறது. இதனால் பெரும்பாலானோர் பலவிதமான க்ரீமைகளை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் வைத்து கொள்வார்கள். என்னதான் முகத்தை அழகாகவும் வெள்ளையாகவும் வைத்துக்கொண்டாலும் உதடு பல பேருக்கு கருமையாக இருக்கும். எனவே இப்பதிவில் உதட்டின் கருமையை போக்கி சிவப்பாக வைத்து கொள்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சிலருக்கு முகத்தை விட உதடு கருப்பாக இருக்கும். முகம் ஒரு கலரிலும் உதடு ஒரு கலரிலும் இருக்கும். எனவே, அப்படி உள்ளவர்கள் இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு சிவப்பாக மாறும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies For Lip Colour in Tamil:

உருளைக்கிழங்கு சாறு:

 uthadu sivappaga

முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதிலுள்ள சாற்றினை 5 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இந்த சாற்றில் ஒரு பஞ்சினை நனைத்து உதட்டில் அப்ளை செய்து தேய்த்து 10 நிமிடங்கள் வரை உலர விட்டு அதன் பிறகு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு சிவப்பாக மாறும்.

கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்க இதை ட்ரை பண்ணுங்க

சர்க்கரை:

ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு துளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டில் ஒரு பஞ்சு துணியை சேர்த்து உதடுகளில் அப்ளை செய்து தேய்த்து விடுங்கள்.  பிறகு, 5 நிமிடங்களுக்கு உதடுகளை விரல் நுனியால் மசாஜ் செய்து அதன் பிறகு தண்ணீரில் கழுவி விடுங்கள்.

வெள்ளரி சாறு:

 home remedies for lip colour in tamil

வெள்ளரிக்காயை நறுக்கி அதிலுள்ள சாற்றினை 5 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.  இந்த சாற்றினை உங்கள் உதட்டில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை உலர விட்டு அதன் பிறகு தண்ணீரை கொண்டு உதட்டை கழுவ வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தி வருவதன் மூலம் உதட்டில் உள்ள கருமை நிறம் நீங்கி சிவப்பாக மாறும். 

முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement