வழுக்கை தலையில் முடி வளர தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்.!

Advertisement

How to Cure Baldness Naturally in Tamil

வணக்கம் நண்பர்களே. பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தலையில் வழுக்கை விழுவது இயற்கையான ஒன்று. ஆனால் இப்போது சிறு வயதிலே சிலருக்கு தலையில் வழுக்கை விழுகிறது. இவ்வாறு சிறிய வயதிலே வழுக்கை வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது உணவு முதல் மரபியல் மாற்றம் வரை இதற்கு காரணமாக இருக்கிறது. எனவே, இதனை நம் இயற்கையான வழியில் எப்படி தடுப்பது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

அக்காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் தலைக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே வழுக்கை தலையில் முடி வளர தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Cure Baldness at Young Age in Tamil:

தேங்காய் எண்ணெய்:

 baldness hair growth oil in tamil

முதலில் தேங்காய் எண்ணெயை 2 தேக்கரண்டி எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்யவும். 4 மணி நேரம் கழித்து தலை குளிக்கவும். இல்லையென்றால் இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து குளித்து விடலாம்.

இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் முடிக்கு ஊட்டமளிக்கும் கொழுப்புகள், ஆல்பா டோகோபெரால் போன்றவை உள்ளன.வை உச்சந்தலையை புத்துணர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் முடியை பலமாக வளரவும் உதவுகிறது.

நீங்களே போதும் போதும்னு சொல்கிற அளவிற்கு தலைமுடி வளர.. தேங்காய் மட்டும் போதும்..!

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மற்ற எண்ணெய்கள்:

ஆமணக்கு எண்ணெய்:

 baldness homemade treatment in tamil

ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளவும்.

இந்த எண்ணெயை குளிப்பதற்கு முன்பு தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.

மிளகுக்கீரை எண்ணெய்:

 வழுக்கை தலை முடி வளர

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மிளகு கீரை எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்தால் போதும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை மறைக்க எலுமிச்சை பழம் மட்டும் போதும்..

பூசணி விதை எண்ணெய்:

 how to cure baldness at young age in tamil

பூசணி விதை எண்ணெய் 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து குளித்து விடலாம். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement