Valukkai Thalaiyil Mudi Valara
வழுக்கை தலை என்பது நாம் வாழ்ந்த முடித்த பிறகு வயதான வயதில் ஒரு சில ஆண்களுக்கு தோன்றும் ஒரு முறையாக இருந்தது. ஆனால் இவை எல்லாம் நம் முன்னோர்கள் காலத்திலேயே முடிந்து விட்டது. இந்த காலத்தில் எல்லாம் 20 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் என இவருவருக்கும் வழுக்கை விழும் பிரச்சனை என்பது இருக்கிறது. இதற்கான ஒரு காரணமாக நாம் முடியினை சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பது ஆகும். ஆகையால் அன்றாடம் நமது முடிக்கு எண்ணெய் தடவுதல், வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது என இதுமாதிரி செய்து வருவதனால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. ஏனென்றால் ஆரம்பத்தில் முடி உதிரச் செய்யும், அதன் பின்பு அது வழுக்கையாக மாறிவிடும். அதனால் இன்று வழுக்கை தலையில் மீண்டும் புதிய முடி வளர என்ன செய்ய வேண்டும் என்று பாட்டி கூறிய வைத்தியம் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies for Regrowth of Hair:
தலையில் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர பாட்டி சொன்ன வைத்தியத்தை ட்ரை செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஊமத்தம் விதை- 200 கிராம்
- அதிமதுரம்- 200 கிராம்
- குங்குமப் பூ- 50 கிராம்
- தேங்காய் எண்ணெய்- 200 கிராம்
முதலில் நீங்கள் உங்களுடைய தலையில் வழுக்கை பிரச்சனை இருக்கும் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதனால் முதலில் மிக்சி ஜாரில் தண்ணீர் இல்லாமல் ஊமத்தம் விதையினை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதுமதுரத்தையும் தண்ணீர் இல்லாமல் நன்றாக பவுடர் போல அரைத்து தனியாக வைத்து விடுங்கள். இப்போது 200 கிராம் தேங்காய் எண்ணெயினை நன்றாக காய வைத்து பின்பு ஆற வைத்து விடுங்கள்.
கடைசியாக ஆற வைத்துள்ள எண்ணெயில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் குங்குமப் பூவினை சேர்த்து நன்றாக கலந்து பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேர்த்து வைத்து விடுங்கள்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை தினமும் குளிக்க போகும் பின்பு தலையில் அப்ளை செய்து பின்பு சிகைக்காய் தேய்த்து தலைகுளித்து விடுங்கள். இவ்வாறு தினமும் அல்லது வாரம் 2 முறை செய்து வருவதன் மூலம் வழுக்கை தலையில் முடி வேகமாக வளர ஆரம்பித்து விடும்.
செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |