Vellai Mudi Karupaga Mara Dye in Tamil
நம் தாத்தா பாட்டிக்கெல்லாம் வயதானால் கூட வெள்ளை முடி வராமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயத்தினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டை மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் வெள்ளை முடி கருப்பாக மாறும். ஆனால் நாளடைவில் மறுபடியும் வெள்ளை முடி வந்து விடும். மேலும் ஆரோக்கியத்திலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் முடி மற்றும் அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அந்த வகையில் இன்றைய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி நரை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
டை தயாரிக்க தேவையான பொருட்கள்:
எலும்பிச்சை- 1
கருஞ்சீரகம்
வெங்காயம்-1
டை செய்முறை:
வெங்காயத்தில் கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்களானது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர செய்கிறது. மேலும் நரை முடிக்கும் உதவு செய்கிறது.
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
முதலில் எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சிறியதாக நறுக்கி சாறாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
அடுத்து எலுமிச்சை பழத்தையும் இரண்டாக நறுக்கி சாறாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
கருஞ்சீரக விதைகளை பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதில் வெங்காய சாறு, எலுமிச்சை சாறு, கருஞ்சீரகம் பவுடர் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். டை பதத்திற்கு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
நம் செய்து வைத்துள்ள டையை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு தலையில் எந்த வித ஷாம்பும் அப்ளை செய்யாமல் தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு அப்ளை செய்து வந்தால் நிரந்தரமாக நரை முடியை கருப்பாக மாற்றலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |