வெள்ளை முடி கருமையாக டிப்ஸ் – Vellai Mudi Karupaga Tips
வெள்ளை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை வெள்ளை முடிக்கு காரணமாக கூறப்படுகிறது. நரைமுடிக்கு நிறைய வகையான பொருட்கள் வந்தாலும் அவையெல்லாம் சரியான ரிசல்டை கொடுப்பதில்லை. மேலும் அவைகளை பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டை உடனே நரைமுடியை கருமையாக மாற்றினாலும் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் கருமை நிறம் மறைந்து வெள்ளை முடிகளாக மாறிவிடும். ஆக இயற்கையான வழிமுறைகளை கடைபிடிப்பது தான் மிகவும் சிறந்தது. இன்றைய பதிவில் நரை முடியை இயர்கையான முறையில் கருமையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- தக்காளி சாறு – ஐந்து ஸ்பூன்
- காபி தூள் – ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – மூன்று ஸ்பூன்
- சார்கோல் பவுடர் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 1 இலை போதும் நரைமுடி அனைத்தையும் அடியோடு கருப்பாக மாற்ற..!
செய்முறை:
ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஐந்து ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் சார்கோல் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். அவ்வளவு தான் நரைமுடியை கருமையக்கக்கூடிய ஹேர் டை தயார்.
பயன்படுத்தும் முறை:
நாம் தயார் செய்த இந்த ஹேர் டையை தலைமுடியில் எங்கெல்லாம் நரை முடி இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின்பு ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை ஷாம்பு போட்டு நன்றாக அலசிவிடலாம்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று மூன்று முதல் ஆறு ஆதங்கள் வரை அப்ளை செய்து வர நரைமுடி கருமையாக மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |