வெள்ளை முடி கருமையாக – Vellai Mudi Karupaga Tips
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது.. இன்றிய காலத்தில் டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கு கூட ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஓன்று நரை முடி. இந்த பிரச்சனை பல வகையான காரணங்களினால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சந்தைகளில் நிறைய வகையான பொருட்களை இருந்தாலும் அவை எல்லாம் முழுமையான பலன்களை தருப்பதில்லை.
ஆக உடல் சார்ந்த இது போன்ற பிரச்சனைகளுக்கு நாம் இயற்கை வழிகளை பின் பற்றுவது தான் சிறந்த வழியாகும். நமக்கு எளிதில் கிடைக்கும் மூலிகை செடிகளை கொண்டு நரை முடியை படி படியாக கருமையாக்கலாம், அது நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் கொடுக்காது. இங்கு நரை முடியை கருமையாக்க ஒரு எளிமையான ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க அது எப்படி தயார் செய்யலாம், என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- ஓமவல்லி இலை – 10
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
- பீட்ருட் – ஒரு கைப்பிடியளவு
- செம்பருத்தி பூ – 20
- காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- கடுக்காய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
- மருதாணி பொடி – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 பொருள் போதும் உங்க நரைமுடி அனைத்தும் வேரிலிருந்து கருமையாக மாறிவிடும்..!
நரை முடி மறைய ஹேர் டை செய்முறை – Vellai Mudi Karupaga Tips:
ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள அதில் ஓமவல்லி இலை, கருவேப்பிலை, துருவிய பீட்ருட் மற்றும் செம்பருத்தி பூ இவை எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நமக்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த கலவையை ஒரு பவுளிற்கு மாற்றி, மிக்சி ஜாரை கழுவி அந்த நீரை இன்னொரு பவுலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் மிக்சியை கழுவி எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் காபி பவுடரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
காபி பவுடர் சேர்த்த பிறகு பொங்கி வரும் அப்பொழுது அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனுடன் செய்து நன்றாக கிளறிவிடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் வரை கிளறிவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடுக்காய் பவுடரை சேர்த்து கட்டிகள் இல்லாதவது நன்றாக கிளறி விடவும்.
ஒரு பேஸ்ட் பதத்திற்கு அந்த கலவை வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு அந்த கலவையை நன்றாக ஆறவிடவும்.
கலவை நன்றாக ஆறியதும் அதனுடன் இரண்டு ஸ்பூன் மருதாணி பவுடரை சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள் அவ்வளவு தான் ஹேர் டை தயார். இந்த ஹேர் டையை அந்த இருப்பு கடையிலேயே வைத்து மூடி போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
பிறகு மறுநாள் எடுத்து ஒரு முறை கிளறிவிட்டுவிட்டு இந்த ஹேர் டையை எடுத்து தலை முடிக்கு பயன்படுத்தலாம். இந்த ஹேர் டையை தலை முடியில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசவும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று ஒரு மாதம் வரை பயன்படுத்தினாலே போதும் உங்கள் தலையில் இருக்கும் வெள்ளை முடி கருமையாக மாறுவதை நீங்களே உணர முடியும். கண்டிப்பாக ஒரு முறை இந்த ஹேர் டையை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி கருமையாக துளசியுடன் இந்த பொருட்களை சேர்த்து ஹேர் ஆயில் & ஹேர் சிரப் தயார் செய்து அப்ளை பண்ணுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |