1 தேக்கரண்டி ஊறிய வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க முடி மளமளவென வளரும்..!

Advertisement

Vendhayam for Hair Growth

பொதுவாக வீட்டில் முடி அதிகமாக கொட்டுகிறது வளரவே இல்லை என்று கூறினால் கவலைகள் எதுவும் இருக்கும் அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கூறுவார்கள். இவ்வாறு இருப்பது என்னவோ ஒரு காரணமாக இருந்தாலும் கூட நம்முடைய நடைமுறை, உணவு மற்றும் பயன்படுத்தும் எண்ணெய் என இதுபோன்ற காரணங்களினாலும் முடி உதிர்வு பிரச்சனை என்பது வருகிறது. அந்த வகையில் முடி உதிர்வினை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டோம் என்றால் அதனை பின்பு சரி செய்ய முடியாமல் போகும் நிலை தான் ஏற்படும். ஆகவே இன்று மிகவும் எளிமையாகவும், இயற்கையான முறையிலும் முடி உதிர்வை நிறுத்தி முடி வேகமாக வளர என்ன செய்யலாம் என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர:

வெந்தயமானது உடல் சூட்டினை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடலுக்கு சில நன்மைகளையும், முடியின் வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஆகவே வெந்தயம் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது.

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம்- 1 தேக்கரண்டி
  • வெங்காயம்- 1
  • தயிர்- 1 ஸ்பூன்

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர

ஹேர் பேக் தயார் செய்வதற்கு முதலில் வெந்தயத்தை நன்றாக தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை தோள் நீக்கி கொண்டு சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து பவுலில் வைத்து கொள்ளுங்கள்.

கடைசியாக பவுலில் உள்ள பேஸ்டுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அதேபோல் தண்ணீர் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம். அவ்வளவு தான் ஹேர் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் பேக்கினை நீங்கள் அப்ளை செய்வதற்க்கு முன்பாக தலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது முடியானது விரைவில் முடி உதிர்வு இல்லாமல் வேகமாக வளரும். (குறிப்பு: சைன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதனை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்)

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்.. இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement