உடல் எடை குறைய வெந்தயம் – Venthayam for Weight Loss
இன்றுள்ள நவீன வாழ்க்கை முறையில், உடல் பருமன் என்பது பலருக்கு இருக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக மாற்றிவிட்டது. எடை குறைப்பு பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவாலான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அப்படி கடும் போராட்டத்தை முன்னெடுத்து உடல் எடையைக் குறைப்பதைப் பெரும் சவாலாகக் கருதுகிறோம்.
ஆனால், அப்படி மிகவும் சிரமப்பட்டு குறைத்த உடல் எடையை அப்படியே பராமரிப்பது தான் உண்மையான சவால். அந்த வலி உடல் எடையை குறைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எந்தவிதமான வழிமுறையைப் பின்பற்றி உடல் பருமனை குறைத்திருந்தாலும், எடை மீண்டும் கூடிவிடால் பார்த்துக்கொள்வதே மிகப்பெரிய சவால் என்பது தான் உண்மை. சரி இந்த பதிவில் வெந்தயத்தை பயன்படுத்தி ஒரு பானம் தயார் செய்து அதனை பருகுவதன் மூலம் 3 கிலோ வரை தொப்பையை குறைக்கலாம். ஆக அந்த பானம் தயார் செய்யும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
செய்முறை – Venthayam for Weight Loss:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற தொப்பை குறையும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே வேக்ஸிங் செய்யலாம்..! எப்படி தெரியுமா..?
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்/ அதுவும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் டீ குடித்து வரும்போது இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெந்தயத்தில் அதிக அளவு அமினோ ஆசிட் உள்ளதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வருவது நல்லது.
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்துவர மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நிறை குடித்து வந்தாலோ அல்லது காலை வெந்தயத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தாலோ செரிமானப்பிரச்சனைகள் அல்சர் போன்ற பிரச்சனைகள் சரி ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் போதும் வறண்டு காணப்படும் முகம் சட்டுனு மிருதுவா மாறிவிடும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |