முடி பளபளப்பாக இருக்க
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வாழ்க்கை முறையினால் முடி உதிர்வு ஏற்படுகிறது. வேலைக்கு செல்கின்ற அவசரத்தினால் சரியாகஉணவு சாப்பிடுவதில்லை, முடியை சரியாக பராமரிப்பதில்லை. முடி உதிர்கிறது என்று கவலைப்பட்டு கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் மட்டும் முடி உதிர்வை தடுக்க முடியாது. முடி உதிர்வை நிறுத்துவதற்காக முதலில் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும், துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதெல்லாம் சரியாக செய்தாலே முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முடியும், முடி அடர்த்தியாக வளர்வதற்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வெந்தயம் முடி வளர:
உடல் சூடு அதிகமாக இருந்தாலும், முடி உதிர்வு ஏற்படும். அதனால் 2 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் பழங்கள் மற்றும் உணவுகளில் வெந்தயத்தைஅதிகமாக சேர்க்க வேண்டும். வெந்தயத்தை வறுத்து விட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை பழங்கள் சாப்பிடும் போது அதன் மேலே தூவி விட்டு சேர்த்து சாப்பிடவும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய வேண்டுமா.. அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க.. |
வெந்தய ஹேர் பேக்:
உங்களின் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். வெந்தய ஊற வைத்த தண்ணீரை சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து தலை தேய்த்து குளிக்கவும்.
பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு அரைத்து வைத்து வெந்தய பேஸ்டுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
முடி பளபளப்பாக இருக்க வெந்தய பேஸ்டுடன் தேங்காய் பால் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்கை வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு பேக்காக பயன்படுத்தி ஒரு மாதம் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |