மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?
உடலையும், முகத்தையும் அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் இதனால் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதனால் முகத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் இந்த பதிவில் மருக்களை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மருக்களை நீக்குவது எப்படி.?
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகரில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் எப்போது பயன்படுத்தினாலும் நேரிடையாக பயன்படுத்த கூடாது. அதனால் ஆப்பிள் சைடர் வினிகரை சிறிதளவு தண்ணீருடன் மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு காட்டன் உருண்டையில் நனைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு 1/2 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு அந்த இடத்தை கழுவி விட வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்கி விடும்.
கன்னம் கொழுகொழுன்னு இருக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு தோலை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் மருக்களின் நிறம் மாறி மரு உதிர்ந்து விடும். ஒரு நாளிலே மரு உதிர்ந்து விடாது. இந்த குறிப்பை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர வேண்டும். அப்போது தான் மருக்கள் உதிரும்.
பூண்டு:
பூண்டு அணைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நம் முன்னோர்களின் காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. பூண்டு 5 பற்களை எடுத்து நச்சு கொள்ளவும். இதனை மருக்கள் உள்ள இடத்தில் வைத்து மேலே ஒரு துணியை வைத்து கட்டி விட வேண்டும். இல்லையென்றால் நேரடியாக பூண்டை மருக்கள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். எப்படி பயன்படுத்தினாலும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்தினாலே மருக்கள் உதிர்ந்து விடும்.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |